Wednesday, 29 June 2016

18.tnpsc general tamil material

341. யார் கேட்டுக் கொண்டதற்கிணங்க வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை இயற்றினார். (உமா மகேசுவரனார்)
342. நாட்டு வாழ்த்துப் பாடல் இடம்பெற்றுள்ள நூல் (நாமக்கல் கவிஞர் பாடல்கள்)
343. நாட்டுவாழ்த்துப் பாடல் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலில் --------------- பகுதியில் அமைந்துள்ளது. (தேசிய மலர்)
344. நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் (மோகனூர்)
345. நாமக்கல் கவிஞர் எக்கலையில் வல்லவர் (ஓவியக்கலை)
346. 'கத்தியின்றி இரத்தமின்ம்றி' என்னும் பாடலை இயற்றியவர் (நாமக்கல் கவிஞர்)
347. நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு ----------- விருதளித்துச் சிறப்பித்தது (பத்மபூஷன்)
348. நாமக்கல் கவிஞருக்கு மாநில அரசு செய்த சிறப்பு (அரசவைக் கவிஞர், சட்ட மேலவை உறுப்பினர்)
349. முதலில் அரசவை கவிஞராக இருந்தவர் (நாமக்கல் கவிஞர்)
350. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுக்கு வழங்கும் வேறு பெயர் (மேற்கணக்கு நூல்கள்)
351. எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றிய நூல் (பதிற்றுப் பத்து, புறநானூறு)
352. அகப்புறப் பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல் (பரிபாடல்)
353. சங்க நூல்கள் பழந்தமிழ் இலக்கணமாகிய --------------- இலக்கியங்களாகத் திகழ்கின்றன. (தொல்காப்பியம்)
354. சங்கப் புலவர்கள் சிறப்பாகக் கையாண்டுள்ள உத்தி ----------- (உள்ளுறை உவமம், இறைச்சி)
355. உள்ளுறை உவமம், இறைச்சி ஆகியவற்றை ------------- எனவும் அழைக்கலாம். (குறிப்புப் பொருள் உத்தி)
356. புறநானூற்றிற்கு வழங்கும் வேறு பெயர் (புறம், புறப்பாட்டு)
357. புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது (புறநானூறு)
358. புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
359. புறநானூற்றில் அமைந்துள்ள திணைகள் (11)
360. புறநானூற்றில் அமைந்துள்ள துறைகள் (65)




No comments:

Post a Comment