Friday, 24 June 2016

19.தமிழ் இலக்கியம்

361.திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் - பாடியவர் யார்?
தொல்காப்பியத் தேவர்
362.கவி காளமேகம் தோன்றிய ஊர் எது?
நந்திபுரம் என்ற நாதன் கோயில்
363.நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
நாதமுனிகள்
364.தானம் செய்ம்மின் தவம்பல தாங்குமின் - என்று கூறும் நூல் எது?
சிலப்பதிகாரம்
365.கோப்பெருந்தேவியின் சிழலம்பில் இருந்த பரல்கள் எவை?
முத்து
366.உதயகுமாரனின் முற்பிறப்புப் பெயர் என்ன?
இராகுலன்
367.பரணருக்குத் தம் மகளையே தொண்டு செய்யப் பணித்த வேந்தன் யார்?
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
368.திருக்குறளில் மூன்றாம் அதிகாரம் எது?
நீத்தார் பெருமை
369.நியாய தத்துவம் - நூலின் ஆசிரியர் யார்?
நாதமுனிகள்
370.பெரியாழ்வாரின் இயற்பெயர் என்ன?
விட்டுணு சித்தர்
371.பெரிய திருமொழி பாடியவர் யார்?
திருமங்கையாழ்வார்
372.ஐயனாரிதனார் என்ற சேர மன்னன் இயற்றிய நூல் எது?
புறப்பொருள் வெண்பா மாலை
373.கோவனின் முற்பிறப்புப் பெயர் என்ன?
பரதன்
374.தொண்டரடிப் பொடியாழ்வாரின் இயற்பெயர் என்ன?
விப்பிர நாராயணன்
375.ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்?
பெரியாழ்வார்
376.உதயண குமார காவியம் -எதன் வழிநூல் ?
பெருங்கதையின் வழிநூல்
377.கம்பராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
ஆறு காண்டங்கள்
378.மணிமேகலை காப்பியத்திற்கு ஆசரிரியர் இட்ட பெயர் என்ன?
மணிமேகலைத் துறவு
379.ஏறு தழுவுதல் எந்த நிலத்திறிகுரியது?
முல்லை
380.குடக்கூத்து ஆடியது யார்?
கண்ணன்



No comments:

Post a Comment