Tuesday, 28 June 2016

21.8-ஆம் வகுப்பு | தமிழ்

911.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"மருமக்கள் வழி மான்மியம்" என்ற நகைச்சுவைக் களஞ்சியத்;தை எழுதியவர் யார்?
கவிஞர் தேசிய விநாயகனார்
912. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    "யாப்பு" என்றால் பொருள் என்ன?
கட்டுதல்
913.    8-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளுக்கு உரிய உறுப்புகளைக் கொண்டு பாடலை உருவாக்குவதே _______ எனப்படும்.
யாப்பு
914.    8-ஆம் வகுப்பு | தமிழ் |யாப்பின் உறுப்புகள் யாவை?
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய ஆறும் உறுப்புகள் ஆகும்.
915.    8-ஆம் வகுப்பு | தமிழ் |ஓரெழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது _______ ஆகும்.
அசை
916.    8-ஆம் வகுப்பு | தமிழ் |அசை எத்;தனை வகைப்படும்?
அசை நேரசை, நிரையசை என இருவகைப்படும்.
917.    8-ஆம் வகுப்பு | தமிழ் |அசைகள் பல சேர்ந்து அமைவது _______ ஆகும்.
சீர்
918.    8-ஆம் வகுப்பு | தமிழ் |சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது _______ எனப்படும்
தளை
919.    8-ஆம் வகுப்பு | தமிழ் |இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சீர்கள் சேர்ந்து அமைவது _______ எனப்படும்
அடி
920.    8-ஆம் வகுப்பு | தமிழ் |செய்யுளின் இலக்கணத்தைக் கூறுவது _______எனப்படும்.
யாப்பிலக்கணம்
921. 8-ஆம் வகுப்பு | தமிழ் |    அடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது _______ எனப்படும்.
பா
922.    8-ஆம் வகுப்பு | தமிழ் |பா-வின் வகைகள் யாவை?
வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா
923.    8-ஆம் வகுப்பு | தமிழ் |வெண்பாவிற்கு எடுத்துக்காட்டு கூறுகள்
திருக்குறளின் 1330- குறளும் குறள் வெண்பா என அழைப்பர்.
924.    8-ஆம் வகுப்பு | தமிழ் |"அணி" என்பதன் பொருள் என்ன?
அழகு
925.    8-ஆம் வகுப்பு | தமிழ் |புலவர்கள், பொருளழகும், சொல்லழகும் தோன்றக் கவிதைகளை இயற்றிக் கற்போரை மனங்குளிரச் செய்வார்கள். இதனை விளக்கும் இலக்கணமே _______என்பர்.
அணியிலக்கணம்
926.    8-ஆம் வகுப்பு | தமிழ் |உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது _______ அணியாகும்.
உருவக அணி
927.    8-ஆம் வகுப்பு | தமிழ் |உவமை, உவமேயம் இவ்விரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படுமாறு வரப்பாடுவது _______ ஆகும்.
உவமையணி
928.    8-ஆம் வகுப்பு | தமிழ் |உவமை, உவமேயம் இரண்டும் தனித்தனியாக எடுத்துக்காட்டி இடையில் உவம உருபு மறையுமாறு அமைக்கப்படுவது _______ ஆகும்.
எடுத்துக்காட்டு உவமையணி
929.    8-ஆம் வகுப்பு | தமிழ் |அணியிலக்கணத்திற்கான நூல்கள் யாவை?
தண்டியலங்காரம், மாறனலங்காரம் 



No comments:

Post a Comment