Wednesday, 29 June 2016

22.tnpsc tet tamil

421. கொண்டாடப்பெறும் திருவள்ளுவராண்டின்படி அவர் வாழ்ந்த காலம் (கி.மு.31)
422. ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாயது (சிலப்பதிகாரம்)
423. முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம் எனப் பாராட்டப்படும் நூல் (சிலப்பதிகாரம்)
424. சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)
425. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு (காதை)
426. சிலப்பதிகாரத்திலுள்ள காதைகளின் எண்ணிக்கை (30)
427. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் (இளங்கோவடிகள்)
428. இளங்கோவடிகளின் தந்தை ------------------- ஆவார் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)
429. இளங்கோவடிகளின் தாயார் பெயர் (நற்சோனை)
430. இளங்கோவடிகளின் தமையன் பெயர் (சேரன்செங்குட்டுவன்)
431. சிலப்பதிகாரத்தின் காலம் (கி.பி.2 ம் நூற்றாண்டு)
432. சிலப்பதிகாரம் அரும்பதங்களுக்கு மட்டும் உரையெழுதியவர் (அரும்பத உரைகாரர்)
433. சிலப்பதிகாரத்திற்கு முற்காலத்தில் விளக்கமான உரை எழுதியவர் (அடியார்க்குநல்லார்)
434. சிலப்பதிகாரத்திற்கு இக்காலத்தில் வழங்கும் மிகச்சிறந்த உரை (ந.மு.வேங்கடசாமி நாட்டார்)
435. சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இவ்வாறு அழைப்பர் (இரட்டைக் காப்பியங்கள்)
436. மணிமேகலையை இயற்றியவர் (சீத்தலைச் சாத்தனார்)
437. யார் வேண்டிக்கொள்ள இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்? (சீத்தலைச் சாத்தனார்)
438. 'நெஞ்சையள்ளும் சிலம்பு' எனப் பாராட்டியவர் (பாரதியார்)
439. "தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம்" எனப்பாராட்டியவர் (கவிமணி)
440. வரி என்பது ------------------ வகையது. (இசைப்பாடல்)



No comments:

Post a comment