Friday, 24 June 2016

23.தமிழ் இலக்கியம்

441.பலர் துஞ்சவும் தான் துஞ்சான் என்பவன் யார்?
சோழன் நலங்கிள்ளி
442.மனைவி இறந்ததற்காக கையறு நிலை பாடியவன் யார்?
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
443.இரட்டைக் காப்பியங்கள் எவை?
சிலப்பதிகாரம் மணிமேகலை
444.வளையாபதியில் எத்தனை பாடல்கள் கிடைத்துள்ளன?
19
445.இந்தியா என்ற இதழை நடத்தியவர் யார்?
பாரதியார்
446.சோழர் காலச் சின்னமாக விளங்குவது எது?
தஞ்சை பிரசுதீஸ்வரர் கோயில்
447.ஞானசம்பந்தர் - படிக்காசு பெற்ற ஊர் எது?
திருவீழிமலை
448.பத்தினிக் கடவுள் வழிபாட்டிற்கு இலகங்கையிலிருந்து வந்த மன்னன் யார்?
கயவாகு
449.இது அதில் இல்லை நாவலாசிரியர் யார்?
கவிஞர் வாலி
450.தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் யார்?
பெரியார் ஈ.வெ.இராமசாமி
451.சிவந்தெழுந்த பல்லவன் உலா எழுதியவர் யார்?
படிக்காசுப் புலவர்
452.காளமேகப் புலவரின் இயற்பயர் என்ன?
வரதன்
453.மனுமுறை கண்ட வாசகம் என்ற உரைநடை நூலை எழுதியவர் யார்?
இராமலிங்க சுவாமிகள்(வள்ளலார்)
454.சுகுண சுந்தரி என்ற நாவலை எழுதியவர் யார்?
வேதநாயகம் பிள்ளை
455.ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே எனப் பாடியவர் யார்?
பொன்முடியார்
456.குட்டித் திருவாசகம் என அழைக்கப்படும் நூல் எது?
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
457.சதாவதானம் என்றழைக்கப்படும் இசுலாமியப் புலவர் யார்?
செய்குத் தம்பி பாவலர்
458.தேம்பாவணி என்ற காப்பியத்தை எழுதியவர் யார்?
வீரமாமுனிவர்
459.தமிழ்க் கவிஞருள் அரசர் என் வீரமாமுனிவர் யாரைக் குறிக்கின்றார்?
திருத்தக்கத்தேவர்
460.முகையதீன் புராணம் பாடியவர் யார்?
வண்ணக் களஞ்சியப் புலவர்



No comments:

Post a Comment