Tuesday, 28 June 2016

27.9-ஆம் வகுப்பு | தமிழ்

1051. 9-ஆம் வகுப்பு | தமிழ்கம்பர்-அம்பிகாபதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் எது?
இராசதண்டனை
1052. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி, வேலங்குடி திருவிழா முதலிய புதினங்களைப் படைத்தவர் யார்?
கண்ணதாசன்
1053. 9-ஆம் வகுப்பு | தமிழ்கண்ணதாசனின் புதினங்களில் சிறந்த படைப்பு எது?
சேரமான் காதலி
1054. 9-ஆம் வகுப்பு | தமிழ்கண்ணதாசனின் எந்த புதினம் "சாகித்திய அகாதமி" விருது பெற்றது?
சேரமான் காதலி
1055. 9-ஆம் வகுப்பு | தமிழ்தென்றல், முல்லை, கண்ணதாசன், கடிதம், தமிழ் மலர் முதலிய இதழ்களை தொடங்கி, அதன் ஆசிரியராக செயல்பட்டவர் யார்?
கண்ணதாசன்
1056. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "நான் நிரந்தரமானவன் அழிவதி;ல்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"இது யாருடைய பாடல்?
கவிஞர் கண்ணதாசன்
1057. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஒரு பொருளின் பெயர், தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்குத் தொன்றுதொட்டுப் பெயராகி வருவது _______ எனப்படும்.
ஆகுபெயர்
1058. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஆகு பெயர் எத்தனை வகைப்படும்?
பதினாறு
1059. 9-ஆம் வகுப்பு | தமிழ்அளவைக் குறிக்கும் பெயர்களை _______ என்பர்.
அளவைப் பெயர்கள்
1060. 9-ஆம் வகுப்பு | தமிழ்அளவைப் பெயர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் அளவைகள் என நான்கு வகைப்படும்
1061. 9-ஆம் வகுப்பு | தமிழ்சொல்லைக் குறிக்காது பொருளுக்குப் பெயராகி வந்தால் அது _______ எனப்படும்.        
சொல்லாகு பெயர்
1062. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருளின் பெயர் அது சார்ந்திருக்கும் இடத்திற்குப் பெயராகி வருவது _______ எனப்படும்.
தானியாகுபெயர்
1063. 9-ஆம் வகுப்பு | தமிழ்கருவி இசைக்கு ஆகி வந்தால் _______ என்பர்.
கருவியாகுபெயர்
1064. 9-ஆம் வகுப்பு | தமிழ்காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்குப் பெயராகி வருவது _______ ஆகும்.
காரியவாகுபெயர்
1065. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஒருவரால் இயற்றப்பெற்ற நூலுக்கு ஆகிவந்தால் அது ______ஆகும்.
கருத்தாவாகுபெயர்
1066. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஒருவரை அழைக்கும் பெயர் அவரைக் குறிக்காமல் அவரைப் போன்ற வேறொருவருக்கு ஆகிவந்தால் அது ____ எனப்படும்.
உவமையாகுபெயர்
1067. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி" -இத்தொடர் ______ ஆகுபெயர் ஆகும்.

எண்ணலளவை
1068. 9-ஆம் வகுப்பு | தமிழ்தயிரை இறக்கு. - இத்தொடர் ______ ஆகுபெயர் ஆகும்.
தானியாகு
1069. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "மூன்று மீட்டர் தா" என்பது ______ பெயராகும்.
நீட்டல் அளவை
1070. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "கம்பர் படிக்கிறேன்" என்பது ______ பெயராகும்.
கருத்தாவாகு



No comments:

Post a comment