Monday, 27 June 2016

28.vao exam general knowledge questions & answers

1.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க வாழை இலை உண்கலமாகப் பயன்படுகிறது
அ)வாழை எவ்வளவு பயன்படுகிறது
ஆ)வாழை இலை எப்படிப் பயன்படுகறிது
இ)வாழை இலை எப்பொழுது பயன்படுகிறது
ஈ)வாழை இலை ஏன் பயன்படுகிறது?

2.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
'உலகம் போற்றும் புகழ் உடையவர்மாகத்மா காந்தி"
அ)புகழ் உடையவர் யார்?
ஆ)மகாத்மா எப்படிப் புகழ் பெற்றார்?
இ)உலகம் போற்றும் புகழ் உடையவர் யார் ?
ஈ)உலகம் யாரைப் போற்றும்?

3.சரியான வினாவைக் காண்க
'நாம் அனைவரும் இந்தியத் தாயின் புதல்வர்கள்"
அ)நாம் யார்?
ஆ)நாம் அனைவரும் யாருடைய புதல்வர்கள்?
இ)நாம் இந்தியாவுக்கு யார்?
ஈ)நாம் இந்தியப் புதல்வர்களா?

4.விடைக்கேற்ற வினாவினைக் காண்க
'நகராட்சித் தலைவர் மக்களிடம் குற்றம் குறைகளைக் கேட்டறிந்தார்"
அ)நகராட்சித் தலைவர் என்ன அறிந்தார்
ஆ)நகராட்சித் தலைவர் மக்களிடம் கேட்டறிந்தாரா?
இ)மக்களிடம் மாநகராட்சித் தலைவர் எதனைக் கேட்பார்?
ஈ)நகராட்சித் தலைவர் மக்களிடம்  எதனைக் கேட்டறிந்தார்?

5.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
'என்னே! வள்ளுவர் கோட்டத்தின் அழகு"
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உடன்பாட வாக்கியம்

6.பின்வரும் தொடர் எவ்வகை வாக்கியம் எனக் கணடறிக
'தமிழக வேந்தர் மூவரும் தழிழை வளர்த்தனர்"
அ)செய்தி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்

7.எவ்வகை வாக்கியம் என அறிக
'பாடதிட்டங்களும் கற்பித்தல் முறைகளும் சுவைபட அமைதல் வேண்டும்"
அ)கட்டளை வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்

8.கீழ்க்காணும் சொற்களுள் பிறவினை எது என அறிக
அ)கற்றான்
ஆ)கற்பான்
இ)கற்பித்தான்
ஈ)கற்பிக்கப்பட்டான்

9.எவ்வகை வாக்கியம் என அறிக
'காஞ்சி கைலாயநாதர் கோயில் இராசசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது"
அ)செயப்பாட்டு வினை
ஆ)பிறவினை
இ)தன்வினை
ஈ)செய்வினை

10.'தொல்காப்பியம் தொல்காப்பியரால் இயற்ப்பட்டது" - இது எவ்வாகை வாக்கியம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டுவினை
ஈ)செய்வினை

11.ஒழுங்கான வாக்கியத்தைக காண்க
அ)சென்னைக் கல்லூரி மாணவர் கிளர்ச்சி ஒன்றில் நடைபெற்றது
ஆ)மாணவர் கிளர்ச்சி நடைபெற்றது சென்னைக் கல்லூரி ஒன்றில்
இ)சென்னைக் கல்லூரி ஒன்றில் மாணவர் கிளர்ச்சி நடைபெற்றது
ஈ)சென்னைக் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது மாணவர் கிளர்ச்சி

12.சொற்கைள ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)தமிழாசிரியர் கற்பிக்கும் பாடங்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது
ஆ)பாடங்கள் மனதில் கற்பிக்கும் தமிழாசிரியர் பசுமரத்தாணி போல் பதிந்தது
இ)தமிழாசிரியர் பதிந்தது மனதில் பாடங்கள் பசுமரத்தாணி போல் கற்பிக்கும்
ஈ)கற்பிக்கும் தமிழாசிரியர் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது பாடங்கள்

13.சொற்கள் முறைப்படி அமைந்துள்ள சரியான வாக்கியத்தைக் கண்டுபிடி
அ)இராமன் வெகுதூரம் சென்றான் காட்டைக் கடந்து
ஆ)இராமன் காட்டைக் கடந்து வெகுதூரம் சென்றான்
இ)காட்டைக் கடந்து சென்றான் வெகுதூரம் இராமன்
ஈ)வெகுதூரம் காட்டைக் கடந்து சென்றான் இராமன்

14.சரியான தொடரைக் கண்டு எழுதுக
அ)உலகம் உடல் பருத்து ஊழல் செய்தால் மன்னிக்காது
ஆ)உலகம் மன்னிக்காது ஊழல் செய்து உடல் பருத்தால்
இ)உடல் பருத்து ஊழல் செய்தால் உலகம் மன்னிக்காது
ஈ)ஊழல் செய்து உடல் பருத்தால் உலகம் மன்னிக்காது

15.பின்வரும் சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)பழித்தவனைத் தடுத்தாலும் தாய்விடக் கூடாது தமிழை
ஆ)தடுத்தாலம் தாய் பழித்தவனை தமிழைப் விடக்கூடாது
இ)தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடக்கூடாது
ஈ)தாய் தடுத்தாலும் விடக்கூடாது தமிழைப் பழித்தவனை

16.பின்வருவனவற்றுள் இடப்பெயர் குறிக்கும் சொற்கள்
அ)உலகம்,நாடு,மாவட்டம்
ஆ)பள்ளி,உடை,கோயில்
இ)காடு,பழம்,வீடு
ஈ)வட்டம்,மரம்,மைதானம்

17.'கை"- என்ன வகைப் பெயர்?
அ)இடப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்

18.'வாழ்வு" - என்ன வகைப் பெயர்?
அ)சினைப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பண்புப்பெயர்

19.பெயர்ச்சொல்லின் வகைறிதல் - 'அணி"
அ)இடுகுறிப் பொதுப் பெயர்
ஆ)இடுகுறிச் சிறப்புப் பெயர்
இ)காரணப் பொதுப் பெயர்
ஈ)காரணச் சிறப்புப் பெயர்

20.ஆட்டம், நகைப்பு, சாக்காடு இவை என்ன வகைப்பெயர்
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)பண்புப்பெயர்



No comments:

Post a Comment