Tuesday, 21 June 2016

29.tnpsc questions and answers in tamil

81.   முறையான கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழும் மாற்றம் - கால ஒழுங்கு முறை மாற்றம்
82.   குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறாத மாற்றம் - கால ஒழுங்கற்ற மாற்றம்
83.   சில மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் உமிழப்படும் மாற்றம் - வெப்பம் உமிழ் மாற்றங்கள்
84.   சில மாற்றங்கள் நிகழும் போது வெப்பம் உறிஞ்சப்படுவது - வெப்பம் கொள் மாற்றங்கள்
85.   ஊகித்து அறிய இயலாதது - நிலநடுக்கம். இவை கால ஒழுங்கற்ற மாற்றங்கள்.
86.   ஊகித்து அறிய இயலக் கூடியது - பருவ நிலை. இவை கால ஒழுங்கு மாற்றங்கள்.
87.   நல்ல பயன்களைத் தராத மாற்றங்கள் - விரும்பத்தகாத மாற்றங்கள்
88.   நல்ல பயன்களைத் தரும் மாற்றங்கள் - விரும்பத்தக்க மாற்றங்கள்
89.   அமாவாசைக்கும் பெளர்ணமிக்கும் இடைப்பட்ட நாள்கள் -15
90.   ஒவ்வொரு மாதமும் அமாவாசையும், பெளர்ணமியும் இதே கால இடைவெளியில் நி்கழ்கிறதா? - ஆம்
91.   மீளா மாற்றங்கள் - சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப இயலாது.
92.   மீள் மாற்றங்கள் - சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பும்.
93.   நிலக்கரி - சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட மரங்கள் பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலக்கரியாக மாறுகிறது.
94.   விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி - கல்பனா சாவ்லா.
95.   கல்பனா சாவ்லா அமெரிக்காவின் கொலம்பியா விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற ஆண்டு - 1997
96.   மீள் மாற்றம் - பனிக்கட்டி உருகுதல், நீர் ஆவியாதல்.
97.   மீளா மாற்றம் - பால் தயிராகுதல், விறகு எரிதல், மாவு இட்லியாதல், முடி நரைத்தல்.
98.   வெல்க்ரோ(Velcro) கண்டுபிட்த்தவர் - ஜார்ஜ் மெஸ்ட்ரல் 1948 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
99.   வெல்க்ரோ - பைகள், காலணிகள், உடைகள் எனப் பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
100.   காற்றை தூய்மைப் படுத்துவது - மரங்கள்.



No comments:

Post a comment