Tuesday, 21 June 2016

30.tnpsc questions and answers in tamil

101.   நமது வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல், நாற்காலி போன்ற பெரும்பாலான பொருள்கள் செய்ய தேவைப்படுவது - மரக்கட்டைகள்.
102.   இரயில் படுக்கைகள், படகுகள் செய்யப் பயன்படும் மரம் - பைன் மரம்.
103.   மாட்டு வண்டியின் பாகங்கள் செய்யப் பயன்படும் மரம் - கருவேல மரம்
104.   தைலம், காகிதம் செய்யப் பயன்படும் மரம் - யூகலிப்டஸ்
105.   தீப்பெட்டி, தீக்குச்சி, சிறுபொம்மைகள், பஞ்சு மெத்தைகள், தலையணை செய்யப் பயன்படும் மரம் - இலவம் மரம்.
106.   விளையாட்டுச் சாமான்கள் ,கிரிக்கெட் மட்டைகள் செய்யப் பயன்படும் மரம் - வில்லோ
107.   டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள் செய்யப் பயன்படும் மரம் - மல்பரி.
108.   விவசாயம் என்பது - ஓர் அறிவியலாகும்.
109.   ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களுக்கு விடைக்காண மேற்கொள்ளும் அனைத்து வகைச் செயல்பாடுகளும் - அறிவியல் ஆகும்.
110.   பூமி, விண்வெளி, அதில் உள்ள கோள்கள், விண்மீன்கள், அவற்றின் இயக்கம், வெளிச்சம், ஓசை என விரிவடையும் அறிவியல் - இயற்பியல்.
111.   விலங்குகளைப் பற்றி படிப்பது - விலங்கியல்.
112.   நாம் பயன்படுத்தும் பொருள்கள் உலோகமா? அலோகமா? அதன் தன்மை? சுவை? அமிலமா? காரமா?, நெடிகள் என்ன? என்று ஆராய்வது - வேதியியல்
113.   உயிருள்ளவைப் பற்றி அதாவது செடி, கொடி, மரம், வீட்டு விலங்குகள், நீர்வாழ் உயிரினங்கள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் போன்றவற்றைப் பற்றி படிப்பது - உயிரியல்.
114.   செடி கொடிகள், மரங்கள் பற்றி படிப்பது - தாவரவியல்.
115.   ஆடைகள், பயன்படுத்தும் கயிறு, சாக்குப் பைகள் போன்றவற்றை வழங்குவது - தாவரங்கள்.
116.   நாம் உடுத்தும் ஆடைகள் யார் தந்த பரிசு - பருத்தி
117.   மெத்தை, தலையணை, பாய், விரிப்புகள் போன்றவற்றை உருவாக்க பயன்படும் தாவரம் - நார்த்தாவரங்கள்.
118.   உணவு தொடர்பான தொழில்கள் அனைத்தும் எதை நம்பி உள்ளன - தாவரம்
119.   மருத்துவ குணம் நிறைந்த தாவரங்களை - மூலிகைகள் என்கிறோம்.
120.   கிருமி நாசினி், உடல் அழகுக்காக பயன்படும் மூலிகை - மஞ்சள்.



No comments:

Post a comment