Tuesday, 21 June 2016

33.tnpsc questions and answers in tamil

161.   தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 50,000 முதல் 75,000 டன் மாம்பழக்கூழ் (Mango pulp) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
162.   பூமி நிலையாக இல்லாமல் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற கோப்பர் நிக்கஸ் கருத்தினை யார் தன்னுடைய ஆய்வுகள் மூலம் நிரூபித்தார் - கலிலியோ.
163.   கி.பி.1609ஆம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் - கலிலியோ
164.   சூரிய ஒரு விண்மீன்; நிலவு கோளவடிவம் கொண்டது என கண்டுபிடித்தவர் - கலிலியோ.
165.   கலிலியோ எந்த நாட்டைச் சார்ந்தவர் - இத்தாலி
166.   கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியால் சூரியக் குடும்பம் பற்றிய பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
167.   உலக விண்வெளி ஆண்டு கொண்டாடப்பட்ட ஆண்டு - 2009 ஆம் ஆண்டு(தொலைநோக்கி கண்டுபிடித்து 400 ஆண்டுகள் நி்றைவடைந்ததை ஒட்டி)
168.   கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கி கருவி தற்போது இத்தாலி நாட்டின் ஃபிளாரன்ஸ் நகரில் உள்ளது.
169.   எந்தெந்தப் பொருள்கள் நமக்கு ஒளியைத் தருகிறதோ அவை ஒளிமூலங்கள் என்கிறோம்.
170.   பொருள்களைப் பார்க்க நமக்கு தேவையானது - ஒளி
171.   ஒளிரும் பொரும் பொருள்கள் - சூரியன் விண்மீன்கள், மெழுவர்த்தி, டார்ச்விளக்கு போன்றவை.
172.   தாமாக ஒளியைத் தரும் பொருள்கள் - ஒளிரும் பொருள்கள்.
173.   தாமாக ஒளியைத் தராத பொருள்கள் ஒளிராப் பொருள்கள்.
174.   சந்திரன் பொலிவுடன் தெரிந்தாலும் அது ஒளிராப் பொருளாகும்.
175.   சூரிய ஒளி புவியை அடைய எடுத்துக்கொள்ளும் காலம் - 8 நிமிடங்கள் 20 வினாடிகள்.
176.   சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும் போது உண்டாவது - கிரகணங்கள்.
177.   சந்திரன் பொலிவுடன் தெரிந்தாலும் அது ஒளிராப்பொருள் ஆகும்.
178.   ஒளி நேர்கோட்டில் செல்கிறது.
179.   தன்வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் - ஒளிபுகாப் பொருள்கள்.
180.   தன்வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்கும் பொருள்கள் - ஒளிபுகும் பொருள்கள்.



No comments:

Post a comment