Sunday, 26 June 2016

34.general tamil questions and answers for tnpsc group

இழவு காத்த கிளிபோல உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.
A. வியப்பு
B. மகிழ்ச்சி
C. ஏமாற்றம்
D. அச்சம்
Answer : C.

கண்டார் இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
A. காண்
B. கண்
C. கண்ட
D. கண்டு
Answer : A.

பிரித்து எழுதுக நான்மறை
A. நால் + மறை
B. நான்கு + மறை
C. நாட் + மறை
D. நாற் + மறை
Answer : B.

பிரித்து எழுதுக நன்னாள்
A. நன்மை + நாள்
B. நன்று + நாள்
C. நல்ல + நாள்
D. நன் + நாள்
Answer : A.

தலை பெயர்ச்சொல்லின் வகை அறிக.
A. பொருட்பெயர்
B. இடப்பெயர்
C. பண்புப்பெயர்
D. சினைப்பெயர்
Answer : D.

பிரித்து எழுதுக : பெருங்குணம்
A. பெரு+குணம்
B. பெருங்+குணம்
C. பெரும்+குணம்
D. பெருமை+குணம்
Answer : D.

ஏ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A. அழைத்தல்
B. ஏவுதல்
C. அம்பு
D. கூவுதல்
Answer : C.

எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக:"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்"
A. கட்டளை வாக்கியம்
B. உணர்ச்சி வாக்கியம்
C. செய்தி வாக்கியம்
D. வினா வாக்கியம்
Answer : D.

உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க: "நனி"
A. மிகுதி
B. குறைவு
C. அதிர்ச்சி
D. அன்பு
Answer : A.

உவமையால் விளக்கப்படும் பொருள்: "பொதிற்கொள் பூமணம் போல"
A. மணம் வீசுதல்
B. வெளிப்படுதல்
C. மறைந்திருத்தல்
D. இணைதல்
Answer : B.

உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க: கா
A. காடு
B. சோலை
C. ஆறு
D. கலை
Answer : B.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : முருகு முறுகு
A. அவயம் நோக்குதல்
B. அழகு முதிர்தல்
C. அழகு சேர்த்தல்
D. அழகு -பார்த்தல்
Answer : B.

உவமையால் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்க – "கடன் பட்டார் நெஞ்சம் போல்"
A. ஆதரவு
B. ஏமாற்றம்
C. வேதனை
D. பகை
Answer : C.

புகன்றான் இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
A. புகன்
B. புகல்
C. புகு
D. புக
Answer : B.

எதிர்ச்சொல் தருக நகை
A. அணிகலன்
B. அச்சம்
C. பெருமிதம்
D. அழுகை
Answer : D.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : பரி பறி
A. ஆடு மான்
B. குதிரை மிகுதி
C. குதிரை பிடுங்குதல்
D. குதிரை அன்பு
Answer : C.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : உலவு உளவு
A. நடமாடு வேவு
B. உதவு -காப்பாற்று
C. காப்பாற்று நடமாடு
D. வேவு -பயிர்த்தொழில்
Answer : A.



No comments:

Post a Comment