Tuesday, 21 June 2016

34.tnpsc questions and answers in tamil

181.   தன்வழியே பகுதியாக ஒளியைச் செல்ல அனுமதிக்கும் பொருள்கள் - ஒளிகசியும் பொருள்கள்
182.   வேலை செய்யத் தேவையான திறமையே - ஆற்றல்
183.   வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஜூல்
184.   ஆற்றலின் அலகு - ஜூல்
185.   தொழிற்சாலைகள் இயங்க தேவையான ஆற்றல் - மின் ஆற்றல்
186.   ஒலி ஆற்றலால் வாகனங்களை இயக்க முடியாது.
187.   நிலக்கரியை எரிக்கும்போது, அதன் வேதியாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது.
188.   காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
189.   அசையும் இலை பெற்றுள்ள ஆற்றல் - இயக்க ஆற்றல்
190.   உங்கள் உள்ளங்கையைத் தேய்க்கும்போது வெளிப்படும் ஆற்றல் - வெப்ப ஆற்றல்.
191.   உராய்வின்மூலம் வெளிப்படுவது - வெப்ப ஆற்றல்.
192.   ஒலிபெருக்கியில் மின்னாற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.
193.   மின்சார அழைப்பு மணி, வாகனங்களில் உள்ள ஒலி எழுப்பிகளில் மின் ஆற்றல் - ஒலி ஆற்றலாக மாறுகிறது.
194.   டார்ச் விளக்கில் வேதியாற்றல் மின்னாற்றலாக மாறி அதிலிருந்து ஒளி ஆற்றல் பெறப்படுகிறது.
195.   எந்த ஒர் ஆற்றல் மாற்றத்திலும் மொத்த ஆற்றலின் அளவு - மாறாமல் இருக்கும்.
196.   மின்சார அடுப்பு, மின்சார சலவைப்பெட்டி முதலியவற்றில் மின்னாற்றல் - வெப்ப ஆற்றலாக மாற்றமடைகிறது.
197.   சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றலினால் கிடைப்பது - மழை
198.   துணி விரைவில் உலரத் தேவைப்படும் ஆற்றல் - சூரியனின் வெப்ப ஆற்றல்
199.   தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள்: கயத்தாறு(திருநெல்வேலி மாவட்டம்), ஆரல்வாய்மொழி(கன்னியாகுமரி மாவட்டம்).
200.   மின்விளக்கில் மின்னாற்றால் - ஒளியாற்றலாக மாற்றப்படுகிறது.



No comments:

Post a comment