Tuesday, 21 June 2016

35.tnpsc material

201.   மின்விசிறியில் மின்னாற்றல் - இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது.
202.   காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
203.   நீர் ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் - மேட்டூர், பவானி சாகர்.
204.   நிலை ஆற்றல் - ஒரு பொருள் அதன் நிலையைப் பொருத்தோ அல்லது வடிவத்தைப் பொருத்தோ பெற்றுள்ள ஆற்றல்
205.   இயக்க ஆற்றல் - இயக்கத்தில் உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல் (எ.கா: நகரும் பேருந்து, ஒடும் குதிரை, பாடும் நீர்)
206.   காற்றின் இயக்க ஆற்றலைக் கொண்டு காற்றாலைகள் மூலம் மின்னாற்றலைத் உற்பத்தி செய்யலாம்.
207.   வேதிவினையின் போது வெளிப்படும் ஆற்றல் - வேதியாற்றல்.(எ.கா:மரம், நிலக்கரி,பெட்ரோல்)
208.   எரிப்பொருள்களில் உள்ள வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாகவும், ஒளி ஆற்றலாகவும் மாற்றமடைகிறது.
209.   மின்கலன்களில் உள்ள வேதி ஆற்றலில் இருந்து மின் ஆற்றல் கிடைக்கிறது.
210.   ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் சூரியனிடமிருந்து பெறும் ஒளி ஆற்றலை எந்த ஆற்றலாக சேமித்து வைக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
211.   ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும் என்பது ஆற்றல் அழிவின்மை விதி.
212.   ஆர்க்கிமிடிஸ் வாழ்ந்த காலம் - கி.மு. 212ஆம் ஆண்டு.
213.   ஆர்க்கிமிடிஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்.
214.   காந்தத்தால் கவரப்படுவது - இரும்பு, நிக்கல், கோபால்ட்
215.   காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் - காந்தத் தன்மை உள்ள பொருள்கள்.
216.   வடக்கே நோக்கும்முனை - வடதுருவம்.
217.   தெற்கே நோக்கும்முனை - தென்துருபவம்
218.   காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி திசையை அறிந்துக் கொள்ள முடியும்.
219.   ஒய்வு நிலையில் இருக்கும்போது(தடங்கல் ஏதுமின்றி) காந்த ஊசியானது தோராயமாக வடக்கு தெற்கு திசையிலேயே நிற்கும்.
220.   காந்தங்களின் எதிரெதிர் துருவங்கள் - ஒன்றையொன்று ஈர்க்கின்றன.



No comments:

Post a comment