Tuesday, 21 June 2016

36.tnpsc material

221.   காந்தங்களின் ஒத்ததுருவங்கள் - ஒன்றையொன்று விலக்குகின்றன.
222.   காந்தப் பாறைகளை மாக்னஸ் கண்டு பிடித்ததால் அதற்கு மாக்னட் என்று பெயர் வந்தது.
223.   காந்தங்கள் எப்பொழுது அதன் காந்தத் தன்னையை இழந்து விடுகின்றன? - வெப்பப்படுத்தும் பொழுதும், கீழே போடும்பொழுதும், சுத்தியால் தட்டும் பொழுதும்.
224.   காந்தத்தில் ஈர்ப்புச் சக்தி அதிகமுள்ள பகுதி இருமுனைகள் ஆகும்.
225.   மின்காந்த தொடர் வண்டிக்கு மிதக்கும் தொடர்வண்டி என்ற பெயரும் உண்டு.
226.   ஒலி நாடா, கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, குறுந்தகடு, கணிணி போன்றவற்றிற்கு அருகில் காந்தங்களை வைத்தால் அவை காந்தத்தன்மையை இழந்து விடும்.
227.   புவி மிகப்பெரிய காந்தமாக செயல்வடுகிறது என்று அறிவித்தவர்? -  1600ல் வில்லியம் கில்பர்ட்.
228.   ஜெயண்ட் வீல் எனப்படும் மிகப் பெரிய இராட்டினங்களை இயக்க மின் காந்தங்கள் தேவை.
229.   மாக்னடைட் - ஒர் இயற்கைக் காந்தம்
230.   இந்தியாவின் முதல் தொடர்வண்டி மும்பையிலிருந்து தானேவுக்கு 1853ஆம் ஆண்டு விடப்பட்டது.
231.   மாலுமிகளுக்கு திசைகாட்டும் கருவியை அளித்தவர்கள் - சீனர்கள்
232.   பல வாயுக்கள் சேர்ந்த கலவை - காற்று
233.   நாம் வாங்கும் உணவுப் பொறுள்களில் கலப்படம் இல்லாதவை என்பதை உறுதி செய்யும் முத்திரை - அக்மார்க் முத்திரை
234.   நிறம், அளவு, வடிவத்தின் அடிப்படையில் பொருள்களை பிரித்தல் - கையால் தெரிந்தெடுத்தல்
235.   கலவையில் உள்ள பகுதிப் பொருள்கள் இலேசானதாக இருந்தால் அவற்றை தூற்றுதல் முறையில் பிரிக்கலாம்.
236.   ஒரே கலவையில் உள்ள பகுதிப் பொருள்களின் பருமனளவு வேறுபட்டால் மட்டுமே அவற்றைச் சலித்தல் முறையில் பிரிக்க முடியும்.
237.   காந்தத்தால் கவரப்படும் ஒரு பொருள் கலவையின் பகுதியாக இருந்தால் அதனைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப் பிரிப்பு முறை
238.   துறைமுகங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தும் பளுத்தூக்கிகளில் பயன்படுத்துவது - மின்காந்தங்கள்
239.   திண்மப் பொருளும், திரவப் பொருளும் கலந்த கலவையை அசையாமல் வைத்து, திரவத்தின் அடியில் திண்மப் பொருளைப் படியச் செய்வது - தெளிய வைத்தல்.
240.   தெளிய வைத்தல் கலவை ஒன்றிலிருந்து, தெளிவான திரவப் பொருளை மட்டும் மற்றொரு கலனுக்குக் கண்ணாடிக்குச்சியின் உதவியுடன் மாற்றுதல் - தெளியவைத்து இறுத்தல் எனப்படும்.



No comments:

Post a comment