Tuesday, 21 June 2016

37.tnpsc material

241.   வடிதாள் வழியே கசிந்து முகவையில் சேகரிக்கப்படும் நீர் - வடிநீர் எனப்படும்.
242.   வடிதாளிலேயே தங்கும் மணல் - கசடு
243.   ஒரு லிட்டர் கடல் நீரில் சுமார் எத்தனை கிராம் உப்பு கரைந்துள்ளது - 3.5 கிராம்
244.   கடல் நீரில் நாம் உண்ணும் உப்பு மட்டும் இல்லாமல் 50க்கும் மேற்பட்ட கனிமங்கள் உள்ளன.
245.   ஒரு நீர்மத்தை வெப்பத்தால் ஆவியாக மாற்றும் முறை - ஆவியாதல்
246.   ஒரு பொருளின் ஆவி, குளிர்ச்சி அடையும்போது நீர்மமாக மாறும் முறைக்கு - ஆவி சுருங்கி நீர்மமாதல் என்று பெயர்.
247.   உப்பைக் கடல் நீரில் இருந்து பிரிக்கும் முறை - ஆவியாதல்
248.   அளவீடுகளும் இயக்கமும்:
249.   தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது - அளவீடு எனப்படும்.
250.   தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு - அலகு எனப்படும்.
251.   பெரும்பாலான அளவுகள் எண் மதிப்பையும், அலகையும் சேர்ந்தே பெற்றிருக்கும்.
252.   எந்த ஒர் அளவீடும் அனைவருக்கும் ஒரே அளவைத்தான் தரவேண்டும் என்பது - திட்ட அளவீடு
253.   மீட்டர், கிலோகிராம், வினாடி போன்றவை - திட்ட அலகுகளாகும்.
254.   நிளம், நிறை, காலம் - அடிப்படை அளவுகள் ஆகும். இவை வேறு எந்த அளவுகளைக் கொண்டும் பெற இயலாது.
255.   FPS முறை - அடி, பவுண்டு, வினாடி
256.   CGS முறை - சென்டிமீட்டர், கிராம், வினாடி
257.   MKS முறை - மீட்டர், கிலோகிராம், வினாடி
258.   பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1960. இதனை SI அலகு முறை என்பர்.
259.   நீளம், நிறை, காலம் - SI அலகுமுறையின் அடிப்படை அளவுகளாகும்.
260.   நீளத்தின் அலகு - மீட்டர்



No comments:

Post a comment