Tuesday, 28 June 2016

40.9-ஆம் வகுப்பு | தமிழ்

1291. 9-ஆம் வகுப்பு | தமிழ்அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது_____ எனப்படும்.
அடியெதுகைத் தொடை
1292. 9-ஆம் வகுப்பு | தமிழ்அடிதோறும் முதற்சீர் முரண்படத் தொடுப்பது _____ எனப்படும்.
அடிமுரண் தொடை
1293. 9-ஆம் வகுப்பு | தமிழ்அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுப்பது_____ எனப்படும்.
அடிஇயைபுத் தொடை
1294. 9-ஆம் வகுப்பு | தமிழ்அடிதோறும் முதல் சீர் அளபெடுத்து வருவது_____ எனப்படும.;
அடியளபெடைத் தொடை
1295. 9-ஆம் வகுப்பு | தமிழ்தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?
முப்பத்தைந்து
1296. 9-ஆம் வகுப்பு | தமிழ்நான்கு சீர்களையுடைய ஓரடியில் பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கது வாய், கீழ்க்கதுவாய், முற்று ஆகியன வரத்தொடுப்பது எது?
தொடை விகற்பம்
1297. 9-ஆம் வகுப்பு | தமிழ்நாலடி கொண்ட சீருள் முதலிரு சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது_____எனப்படும்.
இணைமோனை
1298. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஓர் அடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து ஒத்து வருவது _______ எனப்படும்.
பொழிப்பு மோனை
1299. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஓர் அடியின் முதற்சீரிலும் நான்காம் சீரிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______ எனப்படும்.
ஒரூஉ மோனை
1300. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஓர் அடியின் முதல், இரண்டு, மூன்றாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றி வருவது _______ எனப்படும்.
கூழைமோனை
1301. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஓர் அடியின் முதல், மூன்று, நான்காம் சீர்களில் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______ எனப்படும்.
மேற்கதுவாய் மோனை
1302. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஓரடியின் முதல், இரண்டு, நான்காம் சீர்களில் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______ எனப்படும்.
கீழ்க்கதுவாய் மோனை
1303. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஓர் அடியின் நான்கு சீர்களிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______ எனப்படும்.
முற்று மோனை
1304. 9-ஆம் வகுப்பு | தமிழ்முதலிரு சீர்களின் முதலெழுத்து அளவொத்து நிற்க (ஓசையளவில்) இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது _______ எனப்படும்.
இணை எதுகை
1305. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஓர் அடியுள் முதற் சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______ எனப்படும்.
பொழிப்பு எதுகை
1306. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஓர் அடியுள் முதல் சீரிலும், நான்காம் சீரிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது_____ எனப்படும்.
ஒரூஉ எதுகை
1307. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஓர் அடியுள் முதல், இரண்டு, மூன்றாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது _______ எனப்படும்.
கூழை எதுகை
1308. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஓர் அடியுள் முதல், மூன்று, நான்காம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______ எனப்படும்.
மேற்கதுவாய் எதுகை
1309. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஓர் அடியுள் முதல், இரண்டு, நான்காம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம்; எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது_____எனப்படும்.
கீழ்க்கதுவாய் எதுகை
1310. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஓர் அடியுள் உள்ள நாற்சீர்களிலும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது_____ எனப்படும்.
முற்றெதுகை



No comments:

Post a comment