Monday, 27 June 2016

40.general tamil study material

1.கமலம் இது எவ்வகைப் பெயர்ச்சொல் எனக் காண்க
அ)பொருட்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்

2.பெயர்ச்சொல்லின் வகையைக் காண்க
வகுப்பறை
அ)காலப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)தொழிற்பெயர்

3.தை மாதம் என்ற சொல் பெயர்ச் சொற்களில் எவ்வகையைச் சார்ந்தது எனத் தேர்க
அ)சினைப் பெயர்
ஆ)காலப் பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)இடப்பெயர்

4.மோனை,எதுகை,இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
உண்டி உறையுள் உடுக்கை இவைஈந்தார் பண்தராய் வாழ்வார் பயின்று
அ)உறையுள்,உடுக்கை - எதுகை
ஆ)உண்டி,பண்டிதராய் - எதுகை
இ)உண்டி,உடுக்கை  - எதுகை
ஈ)வாழ்வார்,பயின்று - எதுகை

5.மோனைச் சொல்லை எழுதுக
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி
அ)வசியும் - வாழ்த்தி - பசியும் - பிணியும்
ஆ)பசியும் - பகையும் - வசியும் - வளனும்
இ)பிணியும் - பகையும் - பசியும் - நீங்கி
ஈ)பகையும் - நீங்கி - வாழ்த்தி - பசியும்

6.இயைபுத் தொடையைக் கண்டறிக
பெரியோரை வியத்தலும் இலமே அதனினும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
அ)பெரியோரை - இகழ்தல்
ஆ)சிறியோரை - இகழ்தல்
இ)இலமே -இலமே
ஈ)இகழ்தல் - இலமே

7.அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும்,துறவோர்க்கு எதிர்தலுந் தொல்லோர் சிறப்பின் எதுகைத் தொடை அமைந்த வரிசை யாது?
அ)அறவோர்க்கு - துறவோர்க்கு
ஆ)அறவோர்க்கு - அந்தணர்
இ)துறவோர்க்கு - தொல்லோர்
ஈ)அளித்தலும் - அந்தணர்

8.கண்ணுங் கருத்துமாய்க் கலைகளைக் காத்தனர் இதில் அமைந்துள்ள தொடை யாது என அறிக
அ)எதுகைத் தொடை
ஆ)மோனைத் தொடை
இ)இயைபுத் தொடை
ஈ)முரண் தொடை

9.எதுகையைக் கண்டறிக
அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்
அ)அருமை - பெருமை
ஆ)அருமை - வேண்டும்
இ)வேண்டும் - தரும்
ஈ)உடைத்து - முயற்சி

10.எதுகைச் சொல்ட காண்க
கொல்லாமை நன்று கொலைதீது எழுத்தினைக் கல்லாமை தீது கதம்தீது - நல்லார்
அ)நன்று - கதம்தீது - நல்லார்
ஆ)கொலைதீது - கல்லாமை - நல்லார்
இ)கொல்லாமை - கல்லாமை - நல்லார்
ஈ)நல்லார் - தீது - நன்று

11.தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியங்ளைக் கண்டறிதல் மல்லிகா சோறு சமைத்தாள்
அ)உச்ச வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை

12.உவமைய பொருளைத் தேர்க - மலரும் மணமும் போல
அ)வாழ்தல்
ஆ)பூக்கள்
இ)உதவுதல்
ஈ)அணிதல்

13.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு
அ)சேர்தல்
ஆ)எழுதுதல்
இ)உதவுதல்
ஈ)அணிதல்

14.உவமையைப் பொருளுடன் பொருத்துக. கடல்மடை திறந்தாற்போல
அ)நட்பு
ஆ)துன்பம்
இ)தங்கதடையின்மை
ஈ)வாழ்க்கை

15.உவமையால் விளக்கப் பெறும் பொருள் அறிக புனையா ஒவியம் போல
அ)சிறப்பு
ஆ)அழகு
இ)மகிழ்ச்சி
ஈ)சோகம்

16.உவமையைப் பொருளுடன் பொருத்துக முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை பட்டதைப் போல
அ)பேராசை
ஆ)இயலாமை
இ)ஒழுக்கமின்மை
ஈ)பயனின்மை

17.தாமரை இலைத் தண்ணீர் போல என்ற உவமையால் விளக்கப் பெறும் பொருள்
அ)ஒட்டாமை
ஆ)உறவு
இ)நெருக்கம்
ஈ)பிரிவு

18.காலை,நாள்,ஆண்டு,யுகம் இவை எவ்வகைப் பெயரைச் சார்ந்தவை?
அ)சினைப் பெயர்
ஆ)தொழிற் பெயர்
இ)காலப் பெயர்
ஈ)பண்புப் பெயர்

19.பெயர்ச்சொல் வகை காண்க - பறவை
அ)காலப் பெயர்
ஆ)தொழிற் பெயர்
இ)காரணப் பெயர்
ஈ)இடுகுறிப் பெயர்

20.தலை என்ற சொல் எவ்வகையைச சார்ந்தது என்பதைத் தெரிவி
அ)இடப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)சினைப் பெயர்
ஈ)பொருட்பெயர்



No comments:

Post a comment