Wednesday, 22 June 2016

41.tamil material

1.ஐயகோ பழிபாவத்திற்கு ஆளாகிவிட்டடேன! எவ்வகை வாக்கியம் எனக காண்க.
அ)பிறவினை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்

2.எவ்வகை வாக்கியம் எனக் கண்டு எழுதுக
தாய் சொல்லைத் தட்டாதே
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)தனி வாக்கியம்

3.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவார்களா
அ)செய்தி வாக்கியம்
ஆ)வியப்பு வாக்கியம்
இ)கேள்வி வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்

4.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் நல்ல கருத்துக்களை நாளும் கேட்க
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)விழைவு வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்

5.தன்வினை,பிறவினை செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியங்களாகக் கண்டறிதல்
கணேசன் கந்தனுக்கு ஒதுவித்தான்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)எச்ச வினை

6.எவ்வகை வாக்கியம் என அறிக மலையிலிருந்து உருட்டினான்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)எச்ச வினை

7.அவன் திருந்தினான் (பிறவினை) தருக
அ)அவன் திருத்தினான்
ஆ)அவன் திருந்தான்
இ)அவன் திருந்தினான்
ஈ)அவன் திருந்துவான்

8.செய்வினை வாக்கியத்தைக் கண்டு எழுதுக
அ)அரசர் அறத்தைப் பேணினார்
ஆ)அரசர் பேணினார் அறத்தை
இ)அறம் அரசரால பேண்ப்பட்டது
ஈ)அரசரால் பேணப்பட்டது அறம்

9.கந்தன் இராமனை எழுதுவித்தான் - இது எவ்வகை வாக்கியம் எனக் கூறுக
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)எதிர்மறை

10.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிதல் - தாய்
குழந்தைக்கு உணவை ஊட்டினாள்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)எதிர்மறை வினை
ஈ)செயப்பாட்டு வினை

11.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)உண் ஆயினும் விருந்தோடு மருந்தே
ஆ)விருந்தோடு ஆயினும் மருந்தே உண்
இ)மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
ஈ)உண் விருந்தாடு ஆயினும் மருந்தே

12.பெயர்ச்சொல்லின் வகையறிதல் - நீளம்
அ)குணப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)தொழில் பெயர்

13.பெயர்ச்சொல்லின் வகையிக - விண்மீன்
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்

14.பின்வரும் பெயர்ச்சொல் எந்தப் பெயர்ச்சொல்லைச் சார்ந்தது என்பதை எடுத்தெழுதுக - எழுதுகோல்
அ)இடப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்

15.கேட்டல் - பெயர்ச்சசொல்லின் எந்தப் பிரிவைச் சார்ந்தது?
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)தொழிற்பெயர்

16.இலக்கணக் குறிப்பெழுதுக- கைமலர்
அ)உவமை
ஆ)உருவகம்
இ)ஒருபொருள் பன்மொழி
ஈ)உம்மைத்தொகை

17.கொய்யாப் பழம் இலக்கணம் தருக
அ)எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ)எதிர்மறை வினையெச்சம்
இ)ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்
ஈ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

18.இலக்கணக் குறிப்பு தேர்க - அமுத ஊற்று
அ)பண்புத் தொகை
ஆ)உவமைத்தொகை
இ)உருவகம்
ஈ)உம்மைத் தொகை

19.இலக்கணக் குறிப்பறிக- தழீஇ
அ)சொல்லிசையளபெடை
ஆ)இன்னிசையளபெடை
இ)செய்யுளிசையளபெடை
ஈ)ஒற்றளபெடை

20.வந்த பையன் - இதற்குரிய இலக்கணக் குறிப்பு யாது?
அ)பெயரெச்சம்
ஆ)வினையெச்சம்
இ)வியங்கோள் வினைமுற்று
ஈ)வினைமுற்று



No comments:

Post a comment