Wednesday, 29 June 2016

49.tamil material

961. * கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு பாடுவது - விளையாட்டுப் பாடல்.
962. * வேலை செய்வோர் களைப்பு நீங்க பாடுவது - தொழிற் பாடல்
963. * திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பாடப்பாடுவது - சடங்கு பாடல், கொண்டாட்டப் பாடல்.
964. * சாமி கும்பிடுவோர் பாடுவது - வழிப்பாட்டுப் பாடல்.
965. * இறந்தோர்க்கு பாடுவது - ஒப்பாரி பாடல்.
நாலடியார்
966. நாலடியாரை பாடியவர்கள் - சமண முனிவர்கள். 
967. * நாலடியார் 400 பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களை கூறுவது.
968. * நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
969. * நாலடி நானூறு என்னும் சிறப்புப் பெயர் பெற்ற நூல் - நாலடியார்.
970. * பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்கள்.
971. * பதினெண்கீழ்க்கணக்கு எத்தனை நூல்களை உள்ளடக்கியது - 18
972. * பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சேர்ந்து மேல்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகிறது.
973. * சங்க இலக்கியகளுக்கு பின் தோன்றிய நூல்களின் தொகுப்பிற்கு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என பெயர்.
974. * பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் - சங்க நூல்கள் என அழைக்கப்படுகின்றன.
நான்மணிக்கடிகை:
975. * ஆசிரியர்: விளம்பிநாகனார், விளம்பி என்பது ஊர் பெயர். நாகனார் - இயற்பெயர்.
976. * கடிகை என்றால் - அணிகலன் என்று பொருள்.
977. * நான்மணிக்கடிகையில் உள்ள ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களைக் கூறுகின்றன.
978. * நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது எதன் பொருள் - நான்மணிக்கடிகை.
979. * குடும்பத்தின் விளக்கு - பெண் என்றும், பெண்ணுக்கு விளக்கு பண்பில் சிறந்த பிள்ளைகள் மனத்திற்கினிய அன்புமிக்க பிள்ளைகளுக்கு விளக்கினைப் போன்றது கல்வி, என்ற கருத்து இப்பாடலில் வருகிறது.
980. * பொருள்: மடவாள் - பெண், தகைசால் - பண்பில் சிறந்த, உணர்வு - நல்லெண்ணம், காதல்புதல்வர் - அன்பு மக்கள்.




No comments:

Post a comment