Saturday, 16 July 2016

11.வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று,வினையெச்சம் வினையாலனையும் பெயர்,தொழிற்பெயர் உருவாக்குதல்

வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று,வினையெச்சம் வினையாலனையும் பெயர்,தொழிற்பெயர் உருவாக்குதல்
21.அடி என்னும் வேர்ச்சொல்லின் வினை யெச்சம்
அ)அடித்தான்
ஆ)அடித்த
இ)அடித்து
ஈ)அடித்ததவன்
விடை : இ)அடித்து

22.அறி என்றும் வேர்ச்சொல்லின் வினையெச்சம்
அ)அறிதல்
ஆ)அறிந்த
இ)அறிந்து
ஈ)அறிந்தான்
விடை : இ)அறிந்து

23.கல் என்னும் வேர்ச்சொல்லின் வினை யாலணையும் பெயர்
அ)கல்லுதல்
ஆ)கற்றல்
இ)கற்றவனை
ஈ)கற்று
விடை : இ)கற்றவனை

24.பாடு என்னும் வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயர்
அ)பாடிய
ஆ)பாடி
இ)பாடியது
ஈ)பாடுதல்
விடை : ஈ)பாடுதல்

25.பெறு என்னம் வேர்ச்சொல்லின் தொழிற் பெயர்
அ)பெற்றான்
ஆ)பெறான்
இ)பொற்றிலன்
ஈ)பெறுதல்
விடை : ஈ)பெறுதல்

26.ஒடு என்னும் வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயர்
அ)ஒடிய
ஆ)ஒடினான்
இ)ஒடுதல்
ஈ)ஒடினாள்
விடை : இ)ஒடுதல்

27.கனி என்னும் வேர்ச்சொல்லுக்குரிய வினைமுற்று தருக
அ)கனிந்தது
ஆ)கனிவு
இ)கனிகை
ஈ)கனிதல்
விடை : அ)கனிந்தது

28.வேர்ச்சொல்லை வினையாலணையம் பெயராக மாற்றி அறிக : வணங்கு
அ)வணங்கி
ஆ)வணங்குதல்
இ)வணக்கம்
ஈ)வணங்கியவளை
விடை : ஈ)வணங்கியவளை

29.எடு என்ற வேர்ச்சொல்லின் வினை யெச்சம் தருக
அ)எடுத்தது
ஆ)எடுத்தாளை
இ)எடுத்த
ஈ)எடுத்து
விடை : ஈ)எடுத்து

30.குனி என்ற வேர்ச்சொல்லின் வினை யெச்சம் தருக
அ)குனியும்
ஆ)குனிந்து
இ)குனிந்த
ஈ)குனிந்தது
விடை : ஆ)குனிந்து



No comments:

Post a comment