Saturday, 30 July 2016

12.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.வீரபாண்டிய கட்ட பொம்மன் ஆங்கிலேயரை முதன் முதலில் எதிர்த்தான்"
- இவ் விடைக்கேற்ற வினா யாது?
அ)ஆங்கிலேயர் யாரை எதிர்த்தனர்?
ஆ)ஆங்கிலேயரை முதன்முதலில் எதிர்த்தவன் யார்?
இ)வீரபாண்டிய கட்டபொம்மான் எப்போது போரிட்டான்?
ஈ)வீரபாண்டிய கட்டபொம்மன் எங்கு போரிட்டான்?
விடை : ஆ)ஆங்கிலேயரை முதன்முதலில் எதிர்த்தவன் யார்?
52.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
'இளமையில் கல்வி கற்க வேண்டும்"
அ)இளமையில் கல்வி கற்க வேண்டுமா?
ஆ)இளமையில் கல்வி கற்க வெண்டுமா?
இ)கல்வி என்றால் என்ன?
ஈ)எங்கு கல்வி கற்க வேண்டும்?
விடை : ஆ)இளமையில் கல்வி கற்க வெண்டுமா?
53.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்திடுக
'திருக்குறள் ஒர் அற இலக்கியம்"
அ)திருக்குறளின் பரிவுகள் யாவை?
ஆ)திருக்குறள் இரு வரி இலக்கியமா?
இ)திருக்குறள் எந்த வகை இலக்கியம்?
ஈ)திருக்குறள் சங்க இலக்கியமா?
விடை : இ)திருக்குறள் எந்த வகை இலக்கியம்?
54.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
'பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்"
அ)நட்புக்கு இலக்கணமாகத் திகழந்தவர் யார்?
ஆ)இலக்கணமாகத் திகழ்பவர் யார்?
இ)நட்புக்குச் சிறந்த புலவர் யார்?
ஈ)நட்புக்குச் சிறப்பானவர் யார்?
விடை : அ)நட்புக்கு இலக்கணமாகத் திகழந்தவர் யார்?
55.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
'தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர் திரு.வி.க ஆவார்
அ)தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுவது யார்?
ஆ)தமிழ்த் தென்றல் என்று கூறப்படுவது எது?
இ)தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார்?
ஈ)திரு.வி.க வின் சிறப்புப் பெயர் தமிழ்த் தென்றலா?
விடை : இ)தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார்?
56.விடைக்கேற்ற வினாவைத் தோந்தெடுக்க
'அறிவுடையவரை உலகம் மதிக்கிறது"
அ)உலகம் மதிக்க என்ன செய்ய வேண்டும்?
ஆ)யாரை உலகம் மதிக்கிறது?
இ)யார் உலகத்தை மதிப்பது?
ஈ)அறிவுடையவர் உலகத்தை மதிக்கிறன்றனரா?
விடை : ஆ)யாரை உலகம் மதிக்கிறது?
57.காந்தியடிகள் நமது நாடு விடுதலை பெறுவதற்காக அயராது உழைத்தார் - எவ்வகை வாக்கியம்?
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)தனி வாக்கியம்
விடை : ஆ)செய்தி வாக்கியம்
58.பாரதிதாசன் அழகின் சிரிப்பை இயற்றினார்
-எவ்வகை வினை வாக்கியம்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)எதிர்மறை வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : அ)தன்வினை
59.தாஜ்மஹால் தமிழகச் சிற்பியால் கட்டப்பட்டது
-எவ்வகை வாக்கியம்?
அ)செய்வினை வாக்கியம்
ஆ)தன்வினை வாக்கியம்
இ)செயப்பாட்டு வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : இ)செயப்பாட்டு வினை வாக்கியம்
60.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'என்று தணியும் இந்தச் சுதந்திரத் தாகம்?
அ)வினா வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : அ)வினா வாக்கியம்



No comments:

Post a Comment