Thursday, 14 July 2016

14.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
61. சன்னியாசம் என்பது என்ன?
முற்றும் துறந்த நிலை
62. வேதகாலத்தில் அரசர் செய்த யாகம் என்பது என்ன?
இராஜசூயம், அசுவமேயம், வாஜ்பேயம்
63. இராஜசூயம் என்பது என்ன?
அரசருக்கு உயர்ந்த நிலையை அளிக்க கூடியாகம்
64. அசுவமேயம் என்பது என்ன?
குதிரையாகம் (அரசன் தன் குதிரை எதிர்ப்பின்றி சென்ற நாடுகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது)
65. அசுவம் என்பதன் பொருள்?
குதிரை
66. வாஜ்பேயம் என்பது என்ன?
தேர் பந்தையம் (இதில் அரனுடைய தேர்தான்    எப்பொழுதும் வெற்றி பெறும்)
67. வேதகால அரசியல் அமைப்பின் அடிப்படை எது?
"குலம் என்ற குடும்பம்"
68. வேதகாலத்தில் குடும்பத்தின் தலைவர் என்பவர்  எவ்வாறு அழைக்கப்பட்டார்?
கிரகபதி
69. வேதகாலத்தில் பல குடும்பங்கள் இணைந்தது—— என அழைக்கப்பட்டது.
கிராமம்
70. கிராமத்தின் தலைவர் என்பவர்———— ஆவார்.
கிராமணி
71. பல வேதகாலத்தில் கிராமம் இணைந்தது———அழைக்கப்பட்டது.
விஸ்
72. விஸ் என்று அழைக்;கப்பட்ட பெரிய குழுவின் தலைவர் யார்?
விஸ்யபதி
73. பல விஸ்கள் அல்லது பல குழுக்கள் இணைந்தது————என அழைக்கப்பட்டது.
ஜனா
74. ஜனாவின் தலைவர் யார்?
இராசன் என்ற வேதகால அரசன்
75. வேத கால அரசனுக்கு உதவியவர்கள் யாவர்?
இராஜ குரு, சேனானி, சபா, சமிதி
76. இராஜ குரு என்ற புரோகிதரின் பணி என்ன?
வேதம் ஓதுதல், போரில் அரசர் வெற்றி பெற யாகம்     செய்தல்
77. சேனானி என்பவர் யார்?
படைத்தலைவா
78. சபா என்பது என்ன?
முதியோர் அவை ( தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அவை)
79. சமிதி என்பது என்ன?
மக்கள் அவை (அனைத்து மக்களும் பங்கு கொள்ளும்   அவை)
80. சபா, சமிதி என்ற இரண்டு அவையில் அதிகாரம் மிக்க    அவை (அல்லது) பெரிய அவை? எது?
சமிதி



No comments:

Post a comment