Thursday, 28 July 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.மரபுப் பிழைகள் வழூஉச் சொற்களை நீக்குக
அ)வண்டலூரில் புலிக் குட்டியைப் பார்த்தேன்
ஆ)வண்டலூரில் புலிக் குருளையைப் பார்த்தேன்
இ)வண்டலூரில புலிக் கன்றைப் பார்த்தேன்
ஈ)வண்டலூரில புலிப் பிள்ளையைப் பார்த்தேன்
விடை : அ)வண்டலூரில் புலிக் குட்டியைப் பார்த்தேன்
42.மரபுப் பிழைகள் வழூஉச் சொற்களை நீக்குக
அ)மயில் இறகை விரித்து ஆடியது
ஆ)மயில் சிகை விரித்து ஆடியது
இ)மயில் தோகை விரித்து ஆடியது
ஈ);மயில இறக்கை விரித்து ஆடியது
விடை : இ)மயில் தோகை விரித்து ஆடியது
43.மரபுப் பிழைகள்,வழூஉச் சொற்களை நீக்குக
அ)பசுவைப் பார்த்து கன்று கூவியது
ஆ)பசுவைப் பார்த்து கன்று கத்தியது
இ)பசுவைப் பார்த்து கன்று கதறியது
ஈ)பசுவைப் பார்த்து கன்று உறுமியது
விடை : ஆ)பசுவைப் பார்த்து கன்று கத்தியது
44.பிறமொழிச் சொற்களை நீக்குக
அ)ஈராக்கில் யுத்தத்தை நிறுத் நிபுணர் உதவினார்
ஆ)ஈராக்கில் போரை நிறுத்த வல்லுநர் உதவினார்
இ)ஈராக்கியல் யுத்தத்தை நிறுத் வல்லுநர் உதவினார்
ஈ)ஈராக்கில் சண்டையை நிறுத்த நிபுணர் உதவினார்
விடை : ஆ)ஈராக்கில் போரை நிறுத்த வல்லுநர் உதவினார்
45.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக
அ)உங்கள் வோட் யாருக்கு ?
ஆ)உங்கள் வோட்டு யாருக்கு ?
இ)உங்கள் வாக்கு யாருக்கு?
ஈ)உங்கள் பதிவு யாருக்கு?
விடை : இ)உங்கள் வாக்கு யாருக்கு?
46.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக றுயசனநn
அ)வார்டன் இன்னும் வரவில்லை
ஆ)மேனேஜர் இன்னும் வரவில்லை
இ)விடுதிக் காப்பாளர் இன்னும் வரவில்லை
ஈ)விடுதிச் செயலர் இன்னும் வரவலில்லை
விடை : இ)விடுதிக் காப்பாளர் இன்னும் வரவில்லை
47.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிக Surgery
அ)மருந்தே போதும் சர்ஜரி தேவையில்லை
ஆ)மெடிசன் போதும் அறுவை சிகிச்சை தேவையில்லை
இ)மெடிசின் போதும் சர்சரி தேவையில்லை
ஈ)மருந்தே போதும் அறுவை சிகிச்சை தேவையில்லை
விடை : ஈ)மருந்தே போதும் அறுவை சிகிச்சை தேவையில்லை
48.பிறமொழிச் சொற்களை நீக்குக
தினசரி பூஜை செய்
அ)தினசரி வழிபாடு செய்
ஆ)நாள்தோறும் வழிபாடு செய்
இ)நாள்தோறும் பூஜை செய்
ஈ)எப்பொழுதும் பூஜை செய்
விடை : ஆ)நாள்தோறும் வழிபாடு செய்
49.ஆங்கிலச் சொற்களை நீக்குக Road Bus" ரோட்டுல பஸ் வருகிறது
அ)சாலையில பஸ் வருகிறது
ஆ)ரோட்டுல பேருந்து வருகிறது
இ)சாலையில பேருந்து வருகிறது
ஈ)பாதையில் பஸ் வருகிறது
விடை : இ)சாலையில பேருந்து வருகிறது
50.ஆங்கிலச் சொற்களை நீக்குக
அவன் Dress Dirty யாக  உள்ளது
அ)அவன் ட்ரஸ் அழுக்காக உள்ளது
ஆ)அவன் உடை டர்டியாக உள்ளது
இ)அவன் உடை அருவருப்பாக உள்ளது
ஈ)அவன் உடை அழுக்காக உள்ளது
விடை : ஈ)அவன் உடை அழுக்காக உள்ளது 



No comments:

Post a Comment