Saturday, 30 July 2016

16.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.'நெடுந்தொகை" என்ற அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்
அ)அகநானூறு
ஆ)குறுந்தொகை
இ)புறநானூறு
ஈ)நற்றிணை
விடை : அ)அகநானூறு
92.'தமிழ் மறை" எனப் போற்றப்படுவது
அ)திருமந்திரம்
ஆ)திருக்கோவை
இ)திருக்குறள்
ஈ)திருப்புகழ்
விடை : இ)திருக்குறள்
93.பிரித்தெழுதுக 'வடவெல்லை"
அ)வட +  பெயல்லை
ஆ)வடக்கு +  எல்லை
இ)வட +  எல்லை
ஈ)வடம் +  எல்லை
விடை : ஆ)வடக்கு +  எல்லை
94.பிரித்தெழுதுக :'நன்றன்று"
அ)நன்று +  நன்று
ஆ)நன்று +  அன்று
இ)நன் +  அன்று
ஈ)நல் +  அன்று
விடை : ஆ)நன்று +  அன்று
95.பிரித்து எழுதுக : 'ஏதிலா"
அ)ஏது +  இலா
ஆ)எ +  திலா
இ)ஏதி +  அன்று
ஈ)ஏ +  இலா
விடை : அ)ஏது +  இலா
96.'பேரானந்தம் " - இதைப் பரித்தால் வருவது
அ)பேர் +  ஆனந்தம்
ஆ)பெரு + ஆன்நதம்
இ)பெருமை + ஆனந்தம்
ஈ)பெரிய + ஆனந்தம்
விடை : இ)பெருமை + ஆனந்தம்
97.பிரித்தெழுதுக :'தீந்தமிழ்";
அ)தீது +  தமிழ்
ஆ)தீம் +  தமிழ்
இ)தீமை +  தமிழ்
ஈ)தீந் +  தமிழ்
விடை : ஆ)தீம் +  தமிழ்
98.பிரித்தெழுதுக :' திருவருட்பா"
அ)திரு +  அருள் +  பா
ஆ)திரு +  வருள் +  பா
இ)திருவருட் +  பா
ஈ)திரு +  வருட்பா
விடை : அ)திரு +  அருள் +  பா
99.எதிர்ச்சொல் தருக: 'கனிவு"
அ)இரக்கம்
ஆ)கனி
இ)காய்
ஈ)வெறுப்பு
விடை : ஈ)வெறுப்பு
100.எதிர்சொல் எழுதுக : 'தண்ணீர்"
அ)செந்நீர்
ஆ)பன்னீர்
இ)வெந்நீர்
ஈ)கண்ணீர்
விடை : இ)வெந்நீர்



No comments:

Post a Comment