Friday, 22 July 2016

19.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
41.    தில்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்?
      இப்ராகிம் லோடி
42.    தில்லி சுல்தானியத்தை அடிமை மரபினர் மொத்தம்    எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்?
      84 வருடங்கள்
43.    கில்ஜி மரபினர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் ஆட்சி        செய்தனர்?
      30 வருடங்கள்
44.    துக்ளக் மரபினர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் ஆட்சி       புரிந்தனர்?
      94 வருடங்கள்
45. சையது மரபினர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் ஆட்சி          செய்தனர்?
      37 வருடங்கள்
46. லோடி மரபினர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்?
      75 வருடங்கள்
47.    தைமூர் இந்தியாவின் மீது எந்த ஆண்டு படையெடுத்தார்?
      கி.பி. 1398
48.    அடிமை வம்ச அரசர்கள்————என்றும்         அழைக்கப்பட்டனர்.
      மம்லுக்கள்
49.    அடிமை வம்சத்தின் முதல் அரசர் யார்?
      குத்புதீன் ஐபக்
50.    அடிமை வம்சத்தின் கடைசி அரசர் யார்?
      கைக்கு பாத்
51. அடிமை வம்சத்தில் சிறந்த அரசர் யார்?
      பால்பன்
52.    குத்புதீன் ஐபக் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை       ஆட்சி செய்தார்?
      கி.பி. 1206 முதல் 1210 வரை
53.    குத்புதீன் ஐபக் அடிமை மரபில் ———— இனத்தை சேர்ந்தவர்?
      குத்பி
54.    குத்புதீன் ஐபக்கை முதன் முதலில் அடிமையாக         வாங்கியவர் யார்?
      பக்ருதீன் அப்துல் என்ற நீதிபதி
55.    பக்ருதீன் அப்துல் என்ற நீதிபதி குத்புதின் ஐபக்கை   எங்கு அடிமையாக வாங்கினார்?
      நிஷாப்பூர்
56.    குத்புதீன் ஐபக்கை இரண்டாவதாக அடிமையாக       வாங்கியவர் யார்?
      முகமது கோரி
57.    முகமது கோரி குத்புதீன் ஐபக்கை எங்கு அடிமையாக         வாங்கினார்?
      கஜினியில்
58.    குத்புதீன் ஐபக்கின் தலைநகர் எது?
      இலாகூர்
59.    குத்புதீன் ஐபக்கின் இராணுவ மையமாக இருந்த இடம் எது?
      இந்திரபிரஸ்தம்
60.    "மாலிக்" என்று அழைக்கப்படும் தில்லி சுல்தான் யார்?
      குத்புதீன் ஐபக்



No comments:

Post a Comment