Tuesday, 26 July 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.நீர் மேல் எழுத்துப் போல என்ற உவமையால் உணர்த்தலாகும் பொருள்தளைச சுட்டுக
அ)துன்பம்
ஆ)அசையாமை
இ)உறுதி
ஈ)நிலையற்ற தன்மை
விடை : ஈ)நிலையற்ற தன்மை
2.பூவும் மணமும் போல இத்தொடர் புலப்படுத்தும் பொருள்தனைக் காண்க
அ)நட்பு
ஆ)பகைமை
இ)பயனில்லமை
ஈ)நிலையில்லாமை
விடை : அ)நட்பு
3.ஊமை கண்ட கனவு போல என்னம் இவ்வுவமைத் தொடர் பலப்படுத்தும் பொருள் யாது?
அ)கல்லாமை
ஆ)இயலாமை
இ)இல்லாமை
ஈ)பொறாமை
விடை : ஆ)இயலாமை
4.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
உவமை நவில்தொறும் நூல் நயம் போலும்
அ)பழகப் பழகப் பணமுடையோர் நட்பு கசக்கும்
ஆ)பழகப் பழகப் படித்தவர் நட்பு மணக்கும்
இ)பழகப் பழகப் உதவி உடையவர் நட்பு இனிக்கும்
ஈ)பழகப் பழகப் பண்புடையவர் நட்ப இனிக்கும்
விடை : ஈ)பழகப் பழகப் பண்புடையவர் நட்ப இனிக்கும்
5.மோனையை எடுத்தெழுதுக -
அ)களிறும் - கந்தும்
ஆ)குடும்ப - விளக்கு
இ)தன்னை - நல்ல
ஈ)கடவுள் - அரசன்
விடை : அ)களிறும் - கந்தும்
6.சீர்மோனை அறிந்து எழுதுக
இடயச் சாரலில் ஒருவன் இருமினான் குமரி வாழ்வான் மருந்து கொண்டோடினான்
அ)இமயம் - குமரி
ஆ)இமயம் - இருமினான்
இ)இருமினான் - மருந்து
ஈ)ஒருவன் - மருந்து
விடை : ஆ)இமயம் - இருமினான்
7.எதுகைத் தொடையை எடுத்தெழுதுக
அ)கடித்து - கரும்பு
ஆ)இடித்து - கொள்ளினும்
இ)கூறார் - தம்வாயிற்
ஈ)வில்லுடையான் - இல்லுடையான்
விடை : ஈ)வில்லுடையான் - இல்லுடையான்
8.இயைபுத் தொடையைக கண்டு எழுதுக
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே
அ)செந்தமிழ் - தேன்வந்து
ஆ)செந்தமிழ் - போதினிலே
இ)செந்தமிழ் - பாயுது
ஈ)போதினிலே - காதினிலே
விடை : ஈ)போதினிலே - காதினிலே
9.உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே இத்தொடரில் அமைந்துள்ள மோனைத் தொடையைக குறிப்பிடுக.
அ)உற்றழி - உறுபொருள்
ஆ)உற்றுழி - பிற்றை
இ)பிற்றை  - கற்றல்
ஈ)உதவியும் - கொடுத்தும்
விடை : அ)உற்றழி - உறுபொருள்
10.எதுகைத் தொடையைக் கண்டு எழுதுக கூட்டுறவு தன்னைப் போற்றுங்கடி - நல்ல குடும்ப விளக்கினை ஏற்றுங்கடி
அ)கூட்டுறவு - குடும்ப
ஆ)கூட்டுறவு - போற்றுங்கடி
இ)போற்றுங்கடி - ஏற்றுங்கடி
ஈ)கூட்டுறவு - விளக்கினை
விடை : இ)போற்றுங்கடி - ஏற்றுங்கடி



No comments:

Post a Comment