Thursday, 28 July 2016

20.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
சுத்தமுள்ள இடத்தில் சுகத்தைக் காணலாம்
அ)சுகம் எப்படி பெறலாம்?
ஆ)சுகத்தை எங்கு காணலாம்?
இ)சுகத்தை ஏன் பெற வேண்டும்?
ஈ)சுகத்தை எங்கு பெற வேண்டும்?
விடை : ஆ)சுகத்தை எங்கு காணலாம்?
92.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க மணிமேகலை துறவியானாள்
அ)மணிமேகலை யார்?
ஆ)மணிமேகலை என்ன செய்தாள்?
இ)மணிமேகலை என்னவானாள்?
ஈ)மணிமேகலை துறவியானளா?
விடை : இ)மணிமேகலை என்னவானாள்?
93.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக ஆசிரியர் மாணவர்களைத் தேர்வுக்குத் தயாராகும் படி கூறினார்
அ)யாரைத் தேர்வுக்குத் தயாராகும்படி கூறினது?
ஆ)மாணவர்களிடம்,ஆசிரியர் எதற்குத் தயாராகும்படி கூறினார்?
இ)ஆசரியர்மாணவர்களிடம் கூறியது எது?
ஈ)தேர்வுக்கு தயாராகக் கூறியது யார்?
விடை : ஆ)மாணவர்களிடம்,ஆசிரியர் எதற்குத் தயாராகும்படி கூறினார்?
94.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கல்வி இல்லாப் பெண்கள் களர்நிலம் போன்றவர்கள்
அ)கல்வி இல்லாத பெண்கள் யாரைப் போன்றவர்?
ஆ)கல்வி இல்லாத பெண்கள் எதைப் போன்றவர் ?
இ)கல்வி இல்லாத பெண்கள் விளைநிலம் போன்றவரா?
ஈ)எது களர்நிலம் போன்றது?
விடை : ஆ)கல்வி இல்லாத பெண்கள் எதைப் போன்றவர் ?
95.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக நாட்டின் வளத்துக்கு காடுகளே அடிப்படை
அ)நாட்டின் வளத்துக்கு அடிப்படை யாவை?
ஆ)காடுகள் அடிப்படையாக எதற்கு அமைவது?
இ)காடுகள் நாட்டின் வளத்துக்கு உறுதுணையா?
ஈ)காடுகளின் பயன் யாது?
விடை : அ)நாட்டின் வளத்துக்கு அடிப்படை யாவை?
96.எவ்வகை வாக்கியம் எனக் காண்க நல்ல விளைச்சலுக்கு நல்ல நிலம் வேண்டும்
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)தனி வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : ஆ)செய்தி வாக்கியம்
97.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக
! கண்ணைக் கவரும் நீல நிற ஏரிகள்!
அ)தனி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்
98.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக வளவன் வீடு கட்டினான் புதிய வீட்டில் குடி புகுந்தான்
அ)தொடர் வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : அ)தொடர் வாக்கியம்
99.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக சென்னையில் பெருமழை பெய்தது
அ)செய்தித் தொடர்
ஆ)வினாத்தொடர்
இ)கலவைத்தொடர்
ஈ)தனி வாக்கியம்
விடை : அ)செய்தித் தொடர்
100. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக நாளை நீங்கள் அனைவரும் வருவீர்களா?
அ)செய்தித்தொடர்
ஆ)வினாத்தொடர்
இ)கட்டளைத்தொடர்
ஈ)உணர்ச்சித்தொடர்
விடை : ஆ)வினாத்தொடர்



No comments:

Post a Comment