Tuesday, 26 July 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பத்மா பசுவிலிருந்து பாலைக் கறந்தாள் இதனைச் செயப்பாட்டு வினையாக மாற்றுக
அ)பசு பால் கறந்தது
ஆ)பத்மா பசுவிலிருந்து பாலைக் கறந்தாளா?
இ)பத்மா பசுவிலிருந்து பாலைக் கறந்திலன்
ஈ)பால் பத்மாவால் பசுவிலிரந்து கறக்கப்பட்டது
விடை : ஈ)பால் பத்மாவால் பசுவிலிரந்து கறக்கப்பட்டது
92.உடுக்கை இழந்தவன் கைபோல இவ்வுமையால் விளக்கப்படும் பொருள்
அ)நட்பு
ஆ)விலகுதல்
இ)பகை
ஈ)சுற்றம்
விடை : அ)நட்பு
93.இணரூழ்த்தும் நாறா மலானையர் - இவ்வுவமையால் விளக்கப் பெறும் கருத்து யாது?
அ)மலர்ந்தும் மணம் வீசா மலர்
ஆ)சற்றும் அதை எடுத்து விளக்கத் தெரியாதவர்
இ)அறிஞர்
ஈ)மலரும் மணமும்
விடை : ஆ)சற்றும் அதை எடுத்து விளக்கத் தெரியாதவர்
94.பின்வரும் உவமையால் விளக்கப்படும் பொருள் எது?
அ)தீயோர்நட்பு
ஆ)கணவன் மனைவி உறவு
இ)ஆசரியர் மாணவர் தொடர்பு
ஈ)பண்புடையாளர் தொடர்பு
விடை : ஈ)பண்புடையாளர் தொடர்பு
95.நாய் பெற்ற தெங்கம்பழம் - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
அ)கருமி தான் மட்டும் செலவு செய்வான்
ஆ)கருமியிடம் உள்ள செல்வம் கெட்டியானது
இ)கருமியிடம் உள்ள பணம் அவனுக்கும் பிறர்க்கும் பயன்படாது
ஈ)கருமியிடம் உள்ள பணம் செல்லாத பணம்
விடை : இ)கருமியிடம் உள்ள பணம் அவனுக்கும் பிறர்க்கும் பயன்படாது
96.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க
நுணலும் தன் வாயால் கொடும்
அ)தனக்குத் துன்பம் தானே தேடல்
ஆ)பிறர் அழிவைத் தருதல்
இ)நாவை அடக்கி வாழ்தல்
ஈ)பிறருக்கத தன்மை அறிவித்தல்
விடை : அ)தனக்குத் துன்பம் தானே தேடல்
97.வெண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு இவ்வடியில் எவ்வகை மோனை அமைந்துள்ளது?
அ)பொழிப்பு மோனை
ஆ)ஒரூஉ மோனை
இ)கூழை மோனை
ஈ)இணை மோனை
விடை : ஈ)இணை மோனை
98.மோனைத் தொடை அமைந்த சொற்றொடரைத் தேர்க
அ)வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை
ஆ)தீதும் நன்றும் பிறர்தர பாரா
இ)சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
ஈ)கண்ணும் கருத்துமாய்க கலைகளைக் காத்தனர்
விடை : ஈ)கண்ணும் கருத்துமாய்க கலைகளைக் காத்தனர்
99.எதுகைத் தொடையைக் கண்டறிக தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றெ வேளாண்மை என்னுஞ் செருக்கு
அ)தாளாண்மை - தகைமைக்கண்
ஆ)தாளாண்மை - வேளாண்மை
இ)தகைமைக்கண் - தங்கிற்றே
ஈ)வேளாண்மை - செருக்கு
விடை : ஆ)தாளாண்மை - வேளாண்மை
100.தேரா மன்னா செப்புவ துடையேன்
இதில் பயின்று வரும் தொடை யாது?
அ)மோனைத்தொடை
ஆ)உதுகைத் தொடை
இ)இரட்டைத் தொடை
ஈ)இயைபுத்தொடை
விடை : அ)மோனைத்தொடை



No comments:

Post a Comment