Saturday, 30 July 2016

23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)சுத்தமாக வேண்டும்  சுற்றுப்புறத்தை வைக்க
ஆ)சுற்றுப்புறத்தை வைக்கச் சுத்தமாக வேண்டும்
இ)சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைக்க வேண்டும்
ஈ)வெண்டும் சுற்றுப்புறத்தைச சுத்தமாக வைக்க
விடை : இ)சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைக்க வேண்டும்
42.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)மேகம்,கொள்கை,ஞாலம்,தீபம்
ஆ)தீபம்,மேகம்,கொள்கை,ஞாலம்
இ)ஞாலம்,தீபம்,மேகம்,கொள்கை
ஈ)கொள்கை,ஞாலம்,தீபம்,மேகம்.
விடை : ஈ)கொள்கை,ஞாலம்,தீபம்,மேகம்.
43.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)வட்டம்,கோணம் ,முக்கோணம்,நாற்கோணம்
ஆ)முக்கோணம் நாற்கோணம்,வட்டம்,கோணம்
இ)கோணம்,நாற்கோணம்,முக்கோணம்,வட்டம்
ஈ)வட்டம்,முக்கோணம்,நாற்கோணம்,கோணம்
விடை : இ)கோணம்,நாற்கோணம்,முக்கோணம்,வட்டம்
44.அகர வரிசைப்படி சொற்களை வரிசைப்படுத்துக
வானம்,பூமி,காற்று நெருப்பு,ஆழி
அ)ஆழி,நெருப்பு,காற்று வானம்,பூமி
ஆ)ஆழி,காற்று,நெருப்பு,பூமி,வானம்
இ)வானம்,நெருப்பு,ஆழி,காற்று,பூமி
ஈ)பூமி,ஆழி,நெருப்பு,வானம்,காற்று
விடை : ஆ)ஆழி,காற்று,நெருப்பு,பூமி,வானம்
45.பிறமொழிச் சொற்களை நீக்கிய தொடரைக் காண்க
'கந்தன் பஜனையில் கலந்துக் கொண்டான்"
அ)கந்தன வழிபாட்டில் கலந்துக் கொண்டான்
ஆ)கந்தன் பாட்டுப் பாடுவதிழல் கலந்து கொண்டான்
இ)கந்தன் ஏமாற்றுவதில் கலந்து கொண்டான்
ஈ)கந்தன் கூட்டு வாழிபாட்டில் கலந்து கொண்டான்
விடை : ஈ)கந்தன் கூட்டு வாழிபாட்டில் கலந்து கொண்டான்
46.பிறமொழிச் சொல்லை நீக்கு
அ)மலர்
ஆ)பூ
இ)புஷ்பம்
ஈ)மாலை
விடை : இ)புஷ்பம்
47.பிறமொழிச் சொற்களை நீக்கி எழுது பந்துமித்திரர் சகிதம் வந்து ஆசிரிவதிக்கக் கோருகிறேன்
அ)உற்றார் உறவினர் சகிதம் வந்து ஆசிர்வதிக்கக் கோருகிறேன்
ஆ)பந்து மித்திரர்களுடன் வந்து வாழ்த்தக் கோருகிறேன்
இ)உற்றார் உறவினர்களுடன் வந்து வாழ்த்தக் கோருகிறேன்
ஈ)உற்றார் உறவினர்களுடன் வந்து ஆசிர்வதிக்கக் கோருகிறேன்
விடை : இ)உற்றார் உறவினர்களுடன் வந்து வாழ்த்தக் கோருகிறேன்
48.பிறமொழிச் சொல் இல்லாத தொடரைக் கண்டறிக
அ)ஐனாதிபதி விசேஷமாகப் பிரசங்கம் செய்தார்
ஆ)ஜனாதிபதி விசேஷமாகச் சொற்பொழிவு செய்தார்
இ)குடியரசுத் தவைர் சிறப்பாகப் பிரசங்கம் செய்தார்
ஈ)குடியரசுத் தலைவர் சிறப்புச் சொற்பொழிவு செய்தார்
விடை : ஈ)குடியரசுத் தலைவர் சிறப்புச் சொற்பொழிவு செய்தார்
49.பிறமொழிச்சொல் இல்லாத தொடரைக் கண்டறிக
அ)கும்பாயிஷேகம் பேஷாய் நடந்தது
ஆ)கும்பாபிடேகம் நன்றாய் நடந்தது
இ)குடமுழுக்கு சிறப்பாக நடந்தது
ஈ)நன்னீராட்டு நன்றாக நடந்தது
விடை : இ)குடமுழுக்கு சிறப்பாக நடந்தது
50.ஆங்கில்ச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் தேர்க 'எக்சாமினேஷன் சென்டர்"
அ)தேர்வாளார் மையம்
ஆ)தேர்வு மையம்
இ)தேர்வு அறை
ஈ)தேர்வு அலுவலகம்
விடை : ஆ)தேர்வு மையம் 



No comments:

Post a Comment