Thursday, 14 July 2016

24.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
71. மகாவீரர் எந்த இடத்தில் இறந்தார்?
இராஜகிரிக்கு அருகில் பவபுரி
72. மகாவீரர் இறக்கும் போது அவரின் வயது என்ன?
72 வயது
73. மகாவீரரின் போதனைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
திரி இரத்தினங்கள் (அல்லது) மூன்று இரத்தினங்கள்
74. திரி இரத்தினங்கள் என்பது என்ன?
நல்ல நம்பிக்கை, நல்ல அறிவு, நல்ல நடத்தை
75. பஞ்சரத்தின கொள்கையை பற்றிக் கூறியவர் யார்?
மகாவீரர்
76. அஸ்தேயம் என்பதன் பொருள் என்ன?
திருடாமை
77. 5 விதமான அறிவுகளை பற்றிக் கூறியவர் யார்?
மகாவீரர்
78. கேவல் என்பதன் பொருள் என்ன?
முழுமையான அறிவு
79. 13 வகையான பாகங்களைப் பற்றிக் கூறியவர் யார்?
மகாவீரர்
80. சமண சமயத்தின் இரு பிரிவுகளின் பெயர் என்ன?
திகம்பரர், சுவேதம்பரர்
81. சமண சமயத்தில் திகம்பரர் பிரிவின் தலைவர் யார்?
பத்ரபாகு
82. சமண சமயத்தில் சுவேதம்பரர் பிரிவின் தலைவர் யார்?
ஸ்தூலபாகு
83. திகம்பரர்கள் ———— யை ஆடையாக அணிந்தனர்.
திசையை ஆடையாக அணிந்தனர் (அல்லது) ஆடையை துறந்தவர்கள்.
84. சுவேதம்பரர் ————— ஆடையை அணிந்தனர்.
வெள்ளை ஆடை
85. முதல் சமண சமய மாநாடு நடைபெற்ற இடம் எது?
பாடலிபுத்திரம்
86. முதல் சமண சமய மாநாடு நடைபெற்ற ஆண்டு———
கி.மு.300
87. முதல் சமண மாநாடு யாருடைய தலைமையில்     நடைபெற்றது?
ஸ்தூலபாகு
88. இரண்டாவது சமண சமய மாநாடு எந்த இடத்தில் நடைபெற்றது?
வல்லபி
89. வல்லபி என்பது தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது?
குஜராத்
90. மகாவீரர் இறந்த பவபுரி என்ற இடம் தற்போது உள்ள    மாநிலம்?
பீகார்



No comments:

Post a Comment