Saturday, 30 July 2016

24.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் தேர்க 'இண்டர்நெட்"
அ)இணைப்பு நிறுவனம்
ஆ)இணைவகம்
இ)இணையம்
ஈ)இணைப்பு மையம்
விடை : இ)இணையம்
52.சரியான தமிழ்ச்சொல் கூறு : 'டெலிவிஷன்"
அ)வானொலி
ஆ)ரேடியோ
இ)டெலிபோன்
ஈ)தொலைக்காட்சி
விடை : ஈ)தொலைக்காட்சி
53.ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் கூறுக : 'ரேடியோ"
அ)தொலைக்காட்சி
ஆ)கணிப்பெறி
இ)விண்வெளி
ஈ)வானொலி
விடை : ஈ)வானொலி
54.வழுஉச் சொல் நீங்கிய தொடரைத் தேர்க
அ)அண்ணாக் கயிறு
ஆ)அரைஞான் கயிறு
இ)அரைநாண் கயிறு
ஈ)அரவணைக் கயிறு
விடை : ஆ)அரைஞான் கயிறு
55.ஒருமை பன்மை பிழையற்ற தொடர் தேர்க
அ)நான்கு யானைக்ள கோயிலுக்கு வந்தன
ஆ)நான்கு யானைக்ள கோயிலுக்கு வந்தது
இ)நான்கு யானை கோயிலுக்கு வந்தன
ஈ)நான்கு யானை கோயிலுக்கு வந்தது
விடை : அ)நான்கு யானைக்ள கோயிலுக்கு வந்தன
56.ஒருமை பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக
அ)அறிஞர் பலர் பேசினான்
ஆ)அறிஞன் பேசினார்
இ)அறிஞர் பலர் பேசின
ஈ)அறிஞர் பலர் பேசினர்
விடை : ஈ)அறிஞர் பலர் பேசினர்
57.ஒருமை பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக
அ)பல மாடு உழுதன
ஆ)பல மாடுகள் உழுதன
இ)மாடு உழுதன
ஈ)மாடுகள் பல உழுதது
விடை : ஆ)பல மாடுகள் உழுதன
58.ஒருமை பன்மை பிழை நீக்குக
தலைவி தலைவனோடு சென்றார்
அ)தலைவி தலைவனோடு சென்றனர்
ஆ)தலைவி தலைவனோடு சென்றான்
இ)தலைவி தலைவனோடு சென்றாள்
ஈ)தலைவி தலைவனோடு சென்றார்கள்
விடை : இ)தலைவி தலைவனோடு சென்றாள்
59.ஒருமை பன்மை பிழை நீக்குக
நானும் என் நண்பனும் சென்னை சென்றேன்"
அ)நானும் என் நண்பனும் சென்னை சென்றோம்
ஆ)நானும் என் நண்பனும் சென்னை சென்றார்கள்
இ)நானும் என் நண்பனும் சென்னை செல்லவில்லை
ஈ)நானும் என் நண்பனும் சென்னை சென்றுள்ளோம்
விடை : அ)நானும் என் நண்பனும் சென்னை சென்றோம்
60.மரபு பிழையற்ற தொடரைக் கண்டறிக
அ)தென்னயிலை
ஆ)தென்ன ஒலை
இ)னெதன்ந்தழை
ஈ)தென்னங்கீற்று
விடை : ஈ)தென்னங்கீற்று



No comments:

Post a Comment