Saturday, 30 July 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.ஒரெழுத்தொரு மொழியின் பொருளைத் தேர்க 'கா'
அ)காக்ககை
ஆ)சோலை
இ)கருப்பு
ஈ)பொருள்
விடை : ஆ)சோலை
72.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருள் தேர்க 'ஏ"
அ)கோல்
ஆ)வில்
இ)அம்பு
ஈ)வாள்
விடை : இ)அம்பு
73.ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள் அறிக 'வீ"
அ)செடி
ஆ)மலர்
இ)இலை
ஈ)கிளை
விடை : ஆ)மலர்
74.பெயர் வகை அறிக 'வெற்றிலை"
அ)தொழிற்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பண்பப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்
75.பெயர்சொல் வகையறிக் 'பொங்கல்"
அ)தொழிற்பெயர்
ஆ)ஆகுபெயர்
இ)மரபுப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்
76.தொழிற்பெயர் கூறு 'ஒடு"
அ)ஒடினான்
ஆ)ஒடுதல்
இ)ஒடியது
ஈ)ஒடும்
விடை : ஆ)ஒடுதல்
77.தொழிற்பெயர் எழுதுக 'படி"
அ)படித்தல்
ஆ)படித்தான்
இ)படித்தனர்
ஈ)படிப்பாள்
விடை : அ)படித்தல்
78.பெயர்ச்சொல்லின் வகை அறிக 'வறுமை"
அ)காலப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஈ)பண்புப்பெயர்
79.பெயர்ச்சொல்லின் வகை அறிக 'வற்றல்"
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்
80.'ஊறு" - இலக்கணக் குறிப்பபைக் கண்டறிக
அ)தொழிற்பெயர்
ஆ)இப்பெயர்
இ)முதனிலை திரிந்த தொழிற்பெயர்
ஈ)வினைத்தொகை
விடை : இ)முதனிலை திரிந்த தொழிற்பெயர்



No comments:

Post a Comment