Saturday, 16 July 2016

28.பெயர்ச்சொல்லின் வகையறிதல்

பெயர்ச்சொல்லின் வகையறிதல்
51. பெயர்ச்சொல்லின் வகையறிதல் :கழுத்து
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)வினாப்பயெர்
விடை : ஆ)சினைப்பெயர்

52. பெயர்ச்சொல்லின் வகையறிதல் :குறுமுள்
அ)இடப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)பண்புப்பெயர்

53. பெயர்ச்சொல்லின் வகையறிதல் :மார்கழி
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்

54.பின்வருவனவற்றுள் இடப்பெயர் குறிக்கும் சொற்கள்
அ)உலகம்,நாடு,மாவட்டம்
ஆ)பள்ளி,உடை.கை
இ)காடு,பழம்,விடு
ஈ)வட்டம்,மரம்,முகம்
விடை : அ)உலகம்,நாடு,மாவட்டம்

55. பெயர்ச்சொல்லின் வகையறிதல் :அணி
அ)இடுகுறிப் பொதுப்பெயர்
ஆ)இடுகுறிச் சிறப்புப்பெயர்
இ)காரணப் பொதுப்பெயர்
ஈ)காரணச் சிறப்புப் பெயர்
விடை : இ)காரணப் பொதுப்பெயர்

56.ஆட்டம் நகைப்பு சாக்காடு இவை என்ன வகைப்பெயர்?
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்

57. பெயர்ச்சொல்லின் வகையறிதல் :வேந்தன்
அ)காலப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)பொருட்பெயர்

58.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :சென்னை
அ)குணப்பெயர்
ஆ)காரணப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஈ)இடப்பெயர்

59.சினைப் பெயரைக் குறிக்கும் சொற்கள் யாவை?
அ)கேட்டல் ,படித்தல்
ஆ)காலை,மாலை
இ)அறிவழகன்,பொன்
ஈ)பழம்,கண்
விடை : ஈ)பழம்,கண

60.பெயர்ச்சொல்லின் வகையறிதல் :பறவை
அ)காலப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)காரணப்பெயர்
ஈ)இடுகுறிப்பெயர்
விடை : இ)காரணப்பெயர்



No comments:

Post a comment