Sunday, 24 July 2016

29.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
61. பர்தோலி சத்தியாகிரகத்தை நடத்தியவர் யார்? சர்தார் பட்டேல்
62. லாகூர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் யார்? பண்டித ஜவஹர்லால் நேரு
63. மூவர்ணக் கொடி விடுதலை சின்னமாக ஏற்கப்பட்ட நாள் எது? 31.12.1929
64. உப்பு சத்தியகிரக பாத யாத்திரை தொடங்கப்பட்ட இடம் எது? சபர்மதி ஆசிரமம்
65. உப்பு சத்தியகிரக பாத யாத்திரை முடிவடைந்த இடம் எது? தண்டி கடற்கரை
66. தமிழ் நாட்டில் உப்பு சத்தியகிரகத்தை மேற்க் கொண்டவர் யார்? இராஜாஜி
67. முதல் வட்ட மேஜை மாநாடு நடந்த வருடம் எது? 1930
68. காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான நாள் எது? 05.03.1931
69. பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் எது? 23.03.1931
70. சமூக விருதுகள் அறிவிக்கப்பட்ட வருடம் எது? 1932
71. காந்திஜியின் உண்ணாவிரதம் போராட்டத்தை முடித்து  வைத்த ஒப்பந்தம் எது?பூனா ஒப்பந்தம்
72. பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் யாவர்? காந்திஜியும்இ அம்பேத்கரும்
73. மூன்றாவது வட்டமேஜை மாநாடு நடந்த வருடம் எது? 1932
74. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1935
75. இந்தியாவின் வைசிராயாக நீண்டகாலம் பதவி வகித்தவர் யார்? லின்லித்தோ பிரபு
76. இந்தியாவின் முதல் பிரதேச தேர்தல்கள் நடந்த வருடம் எது? 1937
77. சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றவர் யார்? இராஜாஜி
78. திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? சுபாஷ் சந்திரபோஸ்
79. சுபாஷ் சந்திர போஸினால் முன்னணிக் கட்சி  தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1939
80. ஆகஸ்டு அறிக்கையை ஏற்காத கட்சி எது? காங்;கிரஸ் கட்சி



No comments:

Post a Comment