Tuesday, 26 July 2016

2.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு அண்ணா அரசியல் வாழ்வில் அடக்கத்தை அணிகலனாகக் கொண்டவர்
அ)அண்ணா அரசியல் வாழ்வில் எதனை அணிகலனாகக் கொண்டார்?
ஆ)அண்ணா அரசியல் வாழ்வில் அணிகலனாகக் கொண்டவை யாவை?
இ)அண்ணா அரசியல் வாழ்வில் அணிகலனாகக் கொண்டது ஏன்?
ஈ)அண்ணா அரசியல் வாழ்வில் எது அளிகலனாகக் கொண்டார்?
விடை : அ)அண்ணா அரசியல் வாழ்வில் எதனை அணிகலனாகக் கொண்டார்?
12.எவ்வகை வர்கியமெனக் கண்டறிக நேற்று புயல் அடித்தது ,அதனால் சாலையில் மரங்கள் விழுந்தன
அ)தனி வாக்கியம்
ஆ)தொடர் வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஆ)தொடர் வாக்கியம்
13.வாக்கிய வகையினை எழுதுக
ஆ!மாமராசரின் கல்விப் பணிதான் என்னே
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : அ)உணர்ச்சி வாக்கியம்
14.பெண கல்விக்காக அரசு வழங்கும் ஊக்கச் சலுகைகளை உடனுக்குடன் கிடைக்கச் செய்ய வேண்டும் இது எவ்வகை வாக்கியம்?
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : அ)செய்தி வாக்கியம்
15.எவ்வகை வாக்கியம் எனக் குறிப்பிடுக
ஒழுக்கத்தை உயிரினும மேலாக ஒம்பு
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)தனி வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : அ)கட்டளை வாக்கியம்
16.இரவி கலவியல் கண்ணும் கருத்துமாய் இருந்ததால் முதன்மை மாணவனாய் வந்தான் - இது எவ்வகை வாக்கியம்
அ)தனி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : ஈ)கலவை வாக்கியம்
17.நான் இக்கட்டுரையை எழுதினேன் - இது எவ்வகை வாக்கியம்?
அ)பறிவினை வாக்கியம்
ஆ)செய்வினை வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை : ஆ)செய்வினை வாக்கியம்
18.செய்வினை வாக்கியம் கண்டெழுதுக
அ)தமிழ் மூவேந்தாகளால் வளாக்கப்பட்டது
ஆ)முல்லைப் பூ மிக்க மணமுடையது
இ)மக்கள் நலவழியைத் தேடினர்
ஈ)சினம் அடங்குவது நல்லதா?
விடை : இ)மக்கள் நலவழியைத் தேடினர்
19.செயப்பாட்டு வினை வாக்கியம் கண்டெழுதுக
அ)கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
ஆ)கண்ணன் பள்ளிக்குத் தவறாமல் சென்றான்
இ)பாடம் ஆசிரியரால நன்றாகக் கற்பிக்கப்படுகிறது
ஈ)வள்ளுவர் வாய்மையே சிறந்த அறமாகக் கூறினார்
விடை : இ)பாடம் ஆசிரியரால நன்றாகக் கற்பிக்கப்படுகிறது
20.கண்ணன் முருகனை அடிபத்தான் - இது எவ்வகை வாக்கியம் எனக் குறிப்பிடுக
அ)தன்வினை வாக்கயிம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)செயப்பாட்டு வினை வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : அ)தன்வினை வாக்கயிம்



No comments:

Post a Comment