Friday, 8 July 2016

30.tnpsc question model

301."அ" என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது?
மனிதன்
302. "அ" வில் உள்ள | எதைக் குறிக்கிறது?
வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு
303. நட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக?
ங்க, ந்த, ஞ்ச, ம்ப, ண்ட, ன்ற
304. நட்பு எழுத்துக்களை ________________ என மரபிலக்கணம் கூறுகிறது?
இன எழுத்துக்கள்
305. "தமக்குரியர்" – பிரித்து எழுதுக?
தமக்கு + உரியர்
306. "அன்பீனும்" – பிரித்து எழுதுக?
அன்பு + ஈனும்
307. "நிழலருமை" – பிரித்து எழுதுக?
நிழல் + அருமை
308. "வழக்கென்ப" – பிரித்து எழுதுக?
வழக்கு + என்ப
309. "புறத்துறுப்பு" – பிரித்து எழுதுக?
புறம் + உறுப்பு
310. "தரமில்லை" – பிரித்து எழுதுக?
தரம் + இல்லை
311. "பருப்பு + உணவு" – சேர்த்து எழுதுக?
பருப்புணவு
312. "கரும்பு + எங்கே" – சேர்த்து எழுதுக?
கரும்பெங்கே
313. "அவன் + அழுதான்" – சேர்த்து எழுதுக?
அவனழுதான்
314. "அவள் + ஓடினாள்" – சேர்த்து எழுதுக?
அவளோடினாள்
315. "முயற்சி திருவினை ஆக்கும்" எனக் கூறியவர்?
திருவள்ளுவர்
316. நாலடியாரை இயற்றியவர்?
சமண முனிவர்
317. "நாய்க்கால்" – பொருள் தருக?
நாயின் கால்
318. "ஈக்கால்" – பொருள் தருக?
ஈயின் கால்
319. "அணியர்" – பொருள் தருக?
நெருங்கி இருப்பவர்
320. "என்னாம்?" – பொருள் தருக?
என்ன பயன்




No comments:

Post a comment