Saturday, 2 July 2016

31.tnpsc questions in tamil

: மனோன்மணியம்
• நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பு உடையதாக விளங்குவது மனோன்மணியம் ஆகும்
• வடமொழி நாடகங்களுக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல் இது.
• இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய "இரகசிய வழி" என்ற நூலைத் தழுவி அமைந்தது.
• எனினும் இது வழிநூல் என என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்படும் சிறப்புடையது.
• நன்னூல் மரபு = அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு
• இந்நாடகம் 5 அங்கங்களையும், 20 காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.
• இடையே "சிவகாமி சரிதம்" என்னும் துணைக் கதை ஒன்றும் உள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார்:
• ஊர் = கேரள மாநிலம் ஆலப்புழை
• பெற்றோர் = பெருமாள் பிள்ளை, மாடாத்தி அம்மையார்
• இவர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
• கோடாக நல்லூர் சுந்தர ஸ்வாமிகள் என்பவரைத் தமது ஞானாசிரியராகப் கொண்டு ஒழுகி வந்தார்
சிறப்பு பெயர்:
• ராவ்பகதூர்
• தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை
இவரின் படைப்புகள்:
• நூல் தொகை விளக்கம்
• திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி
• திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி
• Some mile stones in tamil litt
• Some early sovereigns of travameare
சிறப்பு:
• அந்நாளைய சென்னை மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது
• தமிழ்நாடு அரசு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்னும் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி பெருமை படுத்தியுள்ளது.
• இவரின் "நீராருங்கடலுடுத்த" என்ற தமிழ் வாழ்த்துப்பாடல் தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டுள்ளது
• இவரின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு இசை அமைத்தவர் = எம்.எஸ்.விசுவநாதன்
• இவரைத் "தமிழ் செய்யுட் நாட இலக்கியத்தின் தந்தை" எனப் போற்றுவர்
கா.சு.பிள்ளை கூற்று:
• 'தமிழ் இலக்கியத்தில் கால ஆராய்ச்சியைத் தொடங்கி வைத்த பெருமை இவருடையதே" என்கிறார்.
மொழிப்பெயர்ப்பு நூல்கள்:
• இவர் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்




No comments:

Post a comment