Friday, 29 July 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க- ஆ
அ)எருது
ஆ)ஆடு
இ)பசு
ஈ)அம்பு
விடை : இ)பசு
102.தா என்பதன் சரியான பொருள் காண்க
அ)வீடு
ஆ)கேடு
இ)கேள்
ஈ)கொடு
விடை : ஈ)கொடு
103.ஐ என்ற சொல்லின் ஒரெழுத்து ஒரு மொழியைக் குறியிடுக
அ)நான்
ஆ)ஐந்து
இ)தலைவன்
ஈ)ஐயம்
விடை : இ)தலைவன்
104.ஒரெழுத்து ஒரு மொழியிழல் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க - ஈ
அ)இழிவு
ஆ)பொருமை
இ)பகை
ஈ)கொடு
விடை : ஈ)கொடு
105.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - சிரித்தான்
அ)சிரித்தது
ஆ)சிரித்தாய்
இ)சிரித்தன
ஈ)சிரி
விடை : ஈ)சிரி
106.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - வாழ்வோம்
அ)வாழ்
ஆ)வாழ்வு
இ)வாழ்தல்
ஈ)வாழ்ந்தான்
விடை : அ)வாழ்
107.வேர்ச்சொல்லைத் தேர்வு செய் - தேற்றாதான்
அ)தேற்றா
ஆ)தேறு
இ)தேற்றுதல்
ஈ)தேற்றி
விடை : ஆ)தேறு
108.பெற்றான் என்ற வினைமுற்றின் வேர்ச்சொல் தேர்க
அ)பெறு
ஆ)பேறு
இ)பெற்
ஈ)பெற்று
விடை : அ)பெறு
109.சொன்னாள் - வேர்ச்சொல் அறிக
அ)சொன்
ஆ)சொல்
இ)சொன்ன
ஈ)சொள்
விடை : ஆ)சொல்
110.படித்தான் என்பதன் வேர்ச்சொல் அறிக
அ)பாடு
ஆ)பாடி
இ)படு
ஈ)படி
விடை : ஈ)படி



No comments:

Post a Comment