Saturday, 23 July 2016

33.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
341.  மிக அதிக மதிப்புடைய அக்பர் காலத்து நாணயத்தின்  பெயர் என்ன?     சன்சாய்
342.  மிக குறைந்த மதிப்புடைய அக்பர் காலத்து   நாணயத்தின் பெயர் என்ன? ஜிட்டால்
343.  அக்பர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நாணயத்தின்    பெயர் என்ன?     இலாஹி
343.  கிறிஸ்துவ சமய பரப்பு குழு அக்பர் அவைக்கு எந்தெந்த ஆண்டுகளில் வருகை புரிந்தனர்? கி.பி.1580, 1591 மற்றும் 1595.
344.  அக்பருக்கு தத்துவங்களை வழங்கிய சமண    துறவிகள் யார்? ஜுன் சந்திர சூரி, வஜய சூரி
345.  சௌராஷ்டிர மத தத்துவங்களை அக்பருக்கு  போதித்தவர் யார்?   தஷ்தூர் மார்ஜி ராணா
346.  "ஏக இந்தியா" என்ற கனவு கண்ட தேசிய அரசர்   என்று அக்பரை வர்ணித்தவர் யார்?          P.K. திரிபாதி
347.  அக்பர் எந்த ஆண்டு இறந்தார்?      கி.பி. 1605 அக்டோபர் 26
348.  அக்பரின் கல்லரை எங்கு உள்ளது?         ஆக்ராவில் உள்ள சிக்கந்தராவில்
349.  முகலாய மன்னர் ஜஹாங்கீரின் ஆட்சி காலம் என்ன?        கி.பி. 1605 – 1627
350.  ஜஹாங்கீர் எந்த ஆண்டு பிறந்தார்?         கி.பி. 1569 ஆகஸ்ட் 30
351.  ஜஹாங்கீரின் இயற்பெயர் என்ன?          முகமது சலீம்
352.  ஜஹாங்கீர் என்றால் என்ன பொருள்?     உலகை வென்றவர்
353.  ஜஹாங்கீரின் தந்தை பெயர் என்ன?        அக்பர்
354.  ஜஹாங்கீரின் தாய் பெயர் என்ன? ஜோத்பாய் (மரியம்-உஸ்-சாமணி)
355.  சலீம் பிறப்பதற்;கு ஆசி வழங்கிய துறவி யார்?          ஷேக் சலீம் சிஸ்தி
356.  ஷேய்கு பாபா என்று அக்பரால் "பாசமாக"   அழைக்கப்பட்டவர் யார்?      சலீம்
357.  எந்த வரலாற்று அசிரியர் மரணத்திற்;கு ஜஹாங்கீர்   காரணமானார்? அபுல் பாசல்
358.  ஜாங்கீரின் மகன்கள் பெயர் என்னென்ன?   குஸ்கு, குர்ரம், பார்வீஸ், ஷானியர்
359.  குஸ்குவின் தாயின் பெயர் என்ன? மான்பாய்
360.  மான்பாய் யாருடைய மகள்?    ராஜா பகவான் தாஸ்



1 comment: