Monday, 25 July 2016

33.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   தென்னியாவில் நடந்த புரட்சியில் பாளையக்காரர்களுக்குத்   தலைமை ஏற்றவர் யார்?
அ) இராணி இலட்சுமிபாய்   
ஆ) நானா சாகிப்
இ) மருது சகோதரர்கள்         
ஈ) தாந்தியா தோப்
விடை: இ) மருது சகோதரர்கள்      
2.   1857-இல் நடந்த புரட்சியைப் பற்றி ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கும் விதம்
அ) சிப்பாய் கலகம்                
ஆ) பெருங்கலகம்
இ) சுதந்திரப் போர்                
ஈ) விடுதலைப் போராட்டம்
விடை: அ) சிப்பாய் கலகம்             
3.   இந்தியப் பெரும்புரட்சியின் போது இந்தியாவின் தலைமை   ஆளுநராக இருந்தவர்
அ) வெல்லெஸ்லி                  
ஆ) டல்ஹெளசி
இ) கானிங்
ஈ) கிளைவ்
விடை: இ) கானிங்
4.   இயந்திரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட ஆங்கில நாட்டுப்   பொருட்கள் நிரம்பி வழிந்த இடம்
அ) ஆங்கில நாட்டுச் சந்தை           
ஆ) இந்திய நாட்டுச் சந்தை
இ) அரேபிய நாட்டுச் சந்தை           
ஈ) அமெரிக்க நாட்டுச்; சந்தை
விடை: ஆ) இந்திய நாட்டுச் சந்தை
5.   பொது இராணுவப் பணியாளர் சட்டம் வெளிவந்த ஆண்டு
அ) 1856   
ஆ) 1857   
இ) 1858   
ஈ) 1859
விடை: அ) 1856
6.   கான்பூரில் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் யார்?
அ) நானாசாகிப்           
ஆ) இராணி இலட்சுமிபாய்
இ) மங்கள் பாண்டே   
ஈ) பீஷ்வா முதலாம் பாஜிராவ்
விடை: அ) நானாசாகிப்                  
7.   கன்வர்சிங் ஒரு...............
அ) ஆசிரியர்                          
ஆ) சிப்பாய்
இ) நிலப்பிரபு                        
ஈ) கைவினைக் கலைஞர்
விடை: இ) நிலப்பிரபு                     
8.   வங்காளத்திலிருந்த படைவீரர்கள் கீழ்கண்டவர்களின் இடைக்கால புகழினைத் திரும்பவும் கொண்டுவர   எண்ணியவர் யார்?
அ) மராத்தியர்                        
ஆ) முகலாயர்
இ) சீக்கியர்
ஈ) இந்துக்கள்
விடை: ஆ) முகலாயர்
9.   இராணி இலட்சுமிபாய் புரட்சியில் ஈடுபட்ட இடம் எது?
அ) கான்பூர்                            
ஆ) மத்திய இந்தியா
இ) லக்னோ                           
ஈ) டெல்லி
விடை: ஆ) மத்திய இந்தியா
10. வைசிராய் என்பதன் பொருள் என்ன?
அ) அரசப்பிரதிநிதி                
ஆ) கப்பல் தலைவர்
இ) படைத்தளபதி                  
ஈ) சமயத் தலைவர்
விடை: அ) அரசப்பிரதிநிதி              



No comments:

Post a Comment