Tuesday, 12 July 2016

33.vao exam general knowledge questions & answers

641.  * பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் மக்கள் உணவுகளை சமைக்கவும் குடிக்கவும் பனிக்கட்டிகளை உறையவைத்து தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது மிகவும் தூய்மையான தண்ணீராகதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

642.  * உப்பு தண்ணீரில், 96 சதவீதம் தூய்மையானதும், 3 சதவீதம் உப்பாகவும், மீதமுள்ள 1 சதவீதத்தில் சல்பேட், மெக்னீசீயம், புரோமைட், கால்சியம், பொட்டாசியம், ஸ்ட்ரோன்டியம், போரான், ஃபுலுரைடு, தங்கம் உள்ளிட்ட 80 தனிமங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது.

643.  ஸ்பெர்ம் வேல் என்ற திமிங்கலத்தின் மூளை தான் மிகவும் அதிக எடை உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன் எடை 9 கிலோ கிராம் ஆகும், மேலும் இது மனித மூளையை விட ஆறு மடங்கு அதிக எடை உள்ளதாம். இந்த திமிங்கிலத்துக்கு பெரிய தலை இருப்பதால் (அதாவது தன் உடலின் மூன்றின் ஒரு பங்கு) மூளைக்கு அதிகமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

644.  * நோவா (novae) நட்சத்திரங்களின் ஒளி மிகவும் பிரகாசமான ஒளியுடன் தோன்றுபவை. இந்த நட்சத்திரம் பெரிய டெலஸ்கோப்பைக் கொண்டு பார்த்தாலும் பார்ப்பதற்கு தெரியாமல் போகலாம், ஆனால் இதன் ஒளி மனித கண்களுக்கு‌த் தெரியும் அளவுக்கு பிரகாசித்து மறையும்.

645.  * மிகப்பெரிய கோதுமைக் களம் கனடாவில் உள்ள அல்பர்டா என்ற இடத்தில், சுமார் 142 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

646.  * ஹவாய் நாட்டின் மொலொகாய் என்ற வடக்கு கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய கடல் பாறை அமைந்துள்ளது. அது 1005 மீட்டர் (3300 அடி) உயரத்தைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

647.  * உலகத்திலே மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் யூக்கலிப்டஸ் (Eucalyptus) தான். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. காடுகளின் 8 சதவீதம் இம்மரமே உள்ளது. பிரேசில் நாட்டில் மட்டுமே 3.5 மில்லியன் ஏக்கரில் யூக்கலிப்டஸ் மரம் இருக்கிறது.

648.  ஆமைகளின் புதைபடிவங்கள் டிராசிக் காலத்தைச் சார்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன, அதாவது 245 மில்லியன் ஆண்டுகள் முன்பானது. இதனால் கடல் ஆமைகள் ஊர்வன இனத்தைச் சார்ந்திருப்பதால், ஊர்வன இனம் டைனோசர்கள் (200 மில்லியன் ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவை) தோன்றும் முன்பாகவே இருந்ததை குறிப்பிடுகிறது.

649.  மேலும் கடல் ஆமைகளின் ஓடுகள், பல அடுக்குகளால் ஆன எலும்பு பிளேட்டுகள் மற்றும் கொம்புகளால் ஆன கவசத்தையும் உடையது. ஆதலால் ஓடுகள் எதையும் தாங்கும் வலிமையாக உள்ளது. ஆயினும் ஓட்டில் நரம்புகள் இருப்பதால் உணர்திறன் பெற்றுள்ளது.

650.  ஆமைகளின் முதுகு மற்றும் விலா எலும்புகள் ஓட்டுடன் இணைந்திருப்பதால் இதனை ஓடுகளில் இருந்து வெளியே கொண்டு வர முடியாது. மேலும் ஓடுகள் ஆமைகளுக்கு பாதுகாப்பாகவும் திகழ்கிறது.

651.  லெதர்பேக் (leatherback) என்ற கடல் ஆமை தான் மிகவும் நீண்ட வாழ்நாள் கொண்டது, அது 540 கிலோ எடை வரை வளரும் தன்மைக்கொண்டது.

652.  கேலபாகோஸ் பனிப்பிரதேசங்களில் வாழும் ஜியோகிலோனி எலபென்டோஸ் (Geochelone elephantopus) என்ற ஆமைகள் பரந்து விரிந்த மிகப்பெரிய நிலங்களில் வாழ்கின்றன.

653.  நா‌ம் பா‌ர்‌த்து பொறாமை‌ப்படு‌ம் இன‌ங்க‌ளி‌ல் பறவை ‌இன‌ம்தா‌ன் முத‌லி‌ல் இரு‌க்கு‌ம். சுத‌ந்‌திர‌த்‌தி‌ற்கு பெய‌ர்போன பறவை இன‌ங்க‌ளை‌ப் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்‌களை இங்ோகே காணலா‌ம்.

654.  பொதுவாக பறவைக‌ள் ப‌ற்‌றிய ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல், பறவைக‌ளி‌ன் கா‌ல்க‌ளி‌ல் ‌சிறு வளைய‌த்தை மா‌ட்டி‌வி‌ட்டு, அத‌ன் மூல‌ம் பறவை‌யின‌‌ங்க‌ளி‌ன் வா‌ழ்‌விய‌ல் முறை, நடமா‌ட்ட‌ம், ஆயு‌ள், இன‌விரு‌த்‌தி போ‌ன்றவ‌ற்றை ஆ‌ய்வு செ‌ய்‌கி‌ன்றன‌ர்.

655.  கா‌ல்க‌ளி‌ன் அளவு‌க்கு ஏற்டப ‌சி‌றிய மெ‌ட்டி போ‌ன்று இந்மத வளைய‌ம் அமையு‌ம். இ‌‌ந்த வளைய‌த்‌தி‌ல் ‌சில கு‌றி‌யீ‌ட்டு தகவ‌ல்க‌ள் இரு‌க்கு‌ம். இது போ‌ன்று வளைய‌டமி‌ட்ட பறவையை‌ப் பா‌ர்‌க்கு‌ம் பறவை ஆ‌ர்வல‌ர்க‌ள், இந்ுத வளைய‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் கு‌‌றி‌யீ‌ட்டை‌க் கொ‌ண்டு, வளைய‌த்தை மா‌ட்டியவ‌ர்களை தொட‌ர்‌பு கொ‌ண்டு பேசு‌ம் போது பறவை த‌ற்போது, எ‌‌ந்த இட‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறது என்்பதை அறி ‌ந்து கொ‌ள்ள இய‌ல்‌கிறது.

656.  ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.

657.  கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.

658.  பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.

659.  மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.

660.  குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும். 

No comments:

Post a comment