Monday, 25 July 2016

34.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
11. டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலை எழுதியவர் யார்?
அ) காந்தி               
ஆ) நேரு
இ) இரவீந்திரநாத்தாகூர்         
ஈ) வில்லியம் பென்டிங் பிரபு
விடை: ஆ) நேரு
12. 1857-இல் நடந்த புரட்சியில் ஈடுபட்ட இந்தியத்   தலைவர்களின் மிகச் சிறந்தவராகவும்இ வீரமிக்கவர்களாவும் திகழ்தவர் யார்?
அ) தந்தியா தோப்                  
ஆ) நானாசாகிப்
இ) மங்கள் பாண்டே
ஈ) இராணி இலட்சுமிபாய்
விடை: ஈ) இராணி இலட்சுமிபாய்
13. இந்திய மக்களின் மகாசாசனம் என்று கருதப்பட்டது?
அ) இராணுவப் பொதுப்பணியாளர் சட்டம்
ஆ) விக்டோரியா பேரரசின் அறிக்கை
இ) அலகாபாத் உடன்படிக்கை
ஈ) இரண்டாம் பகதூர் ஷாவின் உயில்
விடை: ஆ) விக்டோரியா பேரரசின் அறிக்கை
14. நானா சாகிப்பின் படைகளை வழி நடத்திச் சென்றவர் யார்?
அ) நானா சாகிப்          
ஆ) தாந்தியா தோப்
இ) மங்கள் பாண்டே             
ஈ) கன்வர்சிங்
விடை: ஆ) தாந்தியா தோப்
15. இந்தியப் பெரும் புரட்சியை அடக்க ஆங்கிலேயேருக்கு  உதவி செய்த படைப் பிரிவு
அ) பிரெஞ்சு                           
ஆ) மங்கோலியர்
இ) ஆப்கானியர்                    
ஈ) கூர்க்கர்
விடை: ஈ) கூர்க்கர்
16. புரட்சியின் போது ஆங்கிலேயரின் விரைவான  செயல்பாடுகளுக்கு மிக உதவியாய் இருந்தது?
அ) தந்தி
ஆ) அஞ்சல் முறை
இ) தொலைபேசி                   
ஈ) அ மற்றும் ஆ சரி
விடை: ஈ) அ மற்றும் ஆ சரி
17. விக்டோரியா பேரரசியின் அறிக்கையை கானிங் பிரபு எந்த தர்பாரில் வாசித்தார்.
அ) கொல்கத்தா                     
ஆ) டெல்லி
இ) அலகாபாத்                      
ஈ) மும்பை
விடை: இ) அலகாபாத்                             
18. 1857- இல் பேரக்பூரில் கொழுப்பு தடவிய தோட்டாவை  உபயோகிக்க மறுத்த ராணுவ வீரர் யார்?
அ) கன்வர்சிங்
ஆ) தாந்தியா தோப்
இ) உத்தம் பாண்டே             
ஈ) மங்கள் பாண்டே
விடை: ஈ) மங்கள் பாண்டே
19. ஜான்சி இராணி இலட்சுமிபாய் கொல்லப்பட்ட ஆண்டு எது?
அ) 1857
ஆ) 1858   
இ) 1859   
ஈ) 1856
விடை: ஆ) 1858
20. விக்டோரியா பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு எது?
அ) 1860             
ஆ) 1857   
இ) 1859
ஈ) 1858
விடை: ஈ) 1858
21. 1857-இல் புரட்சியாளர்கள் வெளிப்படையாகப் புரட்சியில் ஈடுபட்ட இடம் எது?
அ) அலகாபாத்             
ஆ) கொல்கத்தா
இ) மீரட்                       
ஈ) லக்னோ
விடை: இ) மீரட்                     



No comments:

Post a Comment