Saturday, 2 July 2016

34.tnpsc questions in tamil

ஐம்பெருங்காப்பியங்களின் வேறுபெயர்கள்:
நூல் வேறுபெயர்கள்
சிலப்பதிகாரம் தமிழின் முதல் காப்பியம்
உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
முத்தமிழ்க்காப்பியம்
முதன்மைக் காப்பியம்
பத்தினிக் காப்பியம்
நாடகப் காப்பியம்
குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
புதுமைக் காப்பியம்
பொதுமைக் காப்பியம்
ஒற்றுமைக் காப்பியம்
ஒருமைப்பாட்டுக் காப்பியம்
தமிழ்த் தேசியக் காப்பியம்
மூவேந்தர் காப்பியம்
வரலாற்றுக் காப்பியம்
போராட்ட காப்பியம்
புரட்சிக்காப்பியம்
சிறப்பதிகாரம்(உ.வே.சா)
பைந்தமிழ் காப்பியம்
மணிமேகலை மணிமேகலைத் துறவு
முதல் சமயக் காப்பியம்
அறக்காப்பியம்
சீர்திருத்தக்காப்பியம்
குறிக்கோள் காப்பியம்
புரட்சிக்காப்பியம்
சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
கதை களஞ்சியக் காப்பியம்
பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
பசு போற்றும் காப்பியம்
சீவக சிந்தாமணி மணநூல்
முக்திநூல்
காமநூல்
மறைநூல்
முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
இயற்கை தவம்
வளையாபதி
குண்டலகேசி குண்டலகேசி விருத்தம்
அகல கவி
கம்பராமாயணம்
ஆசிரியர் குறிப்பு:
பெயர் = கம்பர்
ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர்
தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன்
மகன் = அம்பிகாபதி
மகள் = காவிரி
ஆசிரியரின் சிறப்பு பெயர்:
கவிச்சக்ரவர்த்தி
கவிப்பேரரசர்
கவிக்கோமான்
கம்பநாடுடைய வள்ளல்
இவரின் படைப்புகள்:
ஏர் எழுபது
சிலை எழுபது
திருக்கை வழக்கம்
சரஸ்வதி அந்தாதி
சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது)
கம்பராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்:
கம்பசித்திரம்
கம்பநாடகம்
தோமறுமாக்கதை
இயற்கை பரிணாமம்
நூல் அமைப்பு:
காண்டம் = 6
படலம் = 113
மொத்த பாடல்கள் = 10569
முதல் படலம் = ஆற்றுப்படலம்
இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம்
காண்டங்கள்:
பால காண்டம்
அயோத்தியாகாண்டம்
ஆரண்யகாண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்தகாண்டம்
ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய "உத்தர காண்டம்"
சிறப்பு:
மு.இராகவையங்கார் = "வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலைத் தோய்த்துத் தம் கப்பிய ஓவியத்தைக் கம்பநாடார் வரைந்தார்".
வ.வே.சு.ஐயர் = "கம்பயராமாயணம் தனக்கு முதல் நூலான வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும்"
எஸ்.மகாராஜன் = "உலகத்திலேயே வேறொரு நாட்டில், இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை"
பாரதியார் = "கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்கிறார்.
பாரதியார் = "கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை" என்கிறார்.
கவிமணி = "வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு" என்கிறார்.
• "கல்வியிற் பெரியவர் கம்பர்"
• "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்"
• "கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோருக்கு இதயம் களியாதே"
• "விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்"
தமிழுக்கு கதி = கம்பர், திருவள்ளுவர்
96 வகை ஓசை வகைகளை கம்பர் கையாண்டுள்ளார்.
பொதுவான குறிப்புகள்:
கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் = இராமாவதாரம்
கம்பர் இறந்த இடம் = நாட்டரசன் கோட்டை
கம்பரின் சமாதி உள்ள இடம் = நாட்டரசன் கோட்டை
வான்மீகி எழுதாத "இரணியன் வதைப் படலம்" கம்பராமாயணத்தின் மிக சிறந்த பகுதியாக கருதப்படுகிறது.
கமபராமாயணம் ஒரு வழி நூல்
கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை 1000 பாடல்களுக்கு ஒருமுறை பாடியுள்ளார்.
கம்பார் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் = திருவரங்கம்
கம்பருக்கு தமிழக அரசு திருவழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து சிறப்பித்துள்ளது.
இவர் மூன்றாம் குலோத்துங்கனின் அவை களப் புலவர் ஆவார்.
இவரின் மகன் அம்பிகாபதி சோழன் மகளை காதலித்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் அம்பிகாபதி, அமராவதி இருவரின் உயிர் நீங்க, இவர் சோழ நாட்டை விட்டு வெளியேறினார்.
15 நாட்களில் கம்பராமாயாணம் முழுவதும் எழுதி முடித்தார்(10569 பாடல்கள்)
மேற்கோள்:
தாதகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்
எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தாலே
இல்லாரும் இல்லை உடையாரும்
இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால்
இன்று போய் நாளை வா
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
கை வண்ணம் அங்குக் கண்டேன்
கால் வண்ணம் இங்குக் கண்டேன்
அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா
No comments:

Post a comment