Thursday, 28 July 2016

34.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.ஆசிரியர் மாணவர்களிடம் நன்கு பழகினார் எவ்வகை வாக்கியம் எனக் குறிப்பிடுக
அ)பிறவினை வாக்கியம்
ஆ)தன்வினை வாக்கியம்
இ)உணர்சி வாக்கியம்
ஈ)செயப்பாட்டுவினை வாக்கியம்
விடை : ஆ)தன்வினை வாக்கியம்
112.பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு ஆனது போல் - உவமை விளக்கும் பொருள் யாது?
அ)நினைத்தது ஒன்று , நடந்தது வேறு
ஆ)எதிர்பாராத நன்மை
இ)எதிர்பார்த்த தீமை
ஈ)எண்ணியது நடந்தது
விடை : அ)நினைத்தது ஒன்று , நடந்தது வேறு
113.பசுமரத்தாணி போல் - விளக்கும் பொருள் யாது?
அ)பறிர் புரியாதபடி பேசுவது
ஆ)தெளிவாகப் பேசுவது
இ)பிறர் மனதில் அழமாகப் பதியும் படி பேசுவது
ஈ)குறிப்பால் உணர்த்திப் பேசுவது
விடை : இ)பிறர் மனதில் அழமாகப் பதியும் படி பேசுவது
114.குன்றேறி யானைப்போர் கண்டற்றால் - உவமை விளக்கும் பொருள் யாது?
அ)மலையின் மேல் ஏறி யானையைப் பிடித்தல்
ஆ)தன்கையில் பொருள் இருந்தால் வினையை எளிதில முடிக்கலாம்
இ)உயரமான இடத்தில நின்றால் எல்லாம் காணலாம்
ஈ)வீரம் உள்ளவன் வெற்றி அடைவது உறுதி
விடை : ஆ)தன்கையில் பொருள் இருந்தால் வினையை எளிதில முடிக்கலாம்
115.பின்வரும் உவமையால் விளக்கப்படும் பொருள் யாது
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று
அ)இன்சொல் இருக்க இன்னாச்சொல் பேசுதல்
ஆ)நன்மை தவிர்த்துத் தீமை செய்தல்
இ)நட்பை விடுத்துப் பகைமை கொள்ளுதல்
ஈ)வளத்தை வடுத்து வறுமையை ஏற்றல்
விடை : அ)இன்சொல் இருக்க இன்னாச்சொல் பேசுதல்
116.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க
அச்சில் வார்த்தாற் போல்
அ)வேறுபட்டு இருத்தல்
ஆ)உருவத்தில் இரண்டும் ஒரே மாதிரி இருத்தல்
இ)பண்பில் வேறுபட்டு இருத்தல்
ஈ)சிறியதும் பெரியதுமாக இருத்தல்
விடை : ஆ)உருவத்தில் இரண்டும் ஒரே மாதிரி இருத்தல்
117.கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ மோனையைக் கண்டறிக
அ)கருப்பூரம் - நாறுமோ
ஆ)கமலப்பூ - நாறுமோ
இ)கருப்பூரம் - கமலப்பூ
ஈ)நாறுமோ - கருப்பூரம்
விடை : இ)கருப்பூரம் - கமலப்பூ
118.மதில் மேல் பூனை என்ற உவமையால் விளக்கப்படும் பொருள்
அ)உறுதியில்லாதது
ஆ)நிலையானது
இ)கடினமானது
ஈ)மென்மையானது
விடை : அ)உறுதியில்லாதது
119.இராமன் கானகம் சென்றான் எவ்வாகை வாக்கியம்  எனத் தேர்வு செய்க
அ)தன்வினை வாக்கியம்
ஆ)உதிர்மறை வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : அ)தன்வினை வாக்கியம்
120.செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிக
தலைமையாசிரியரால் பரிசுகள் வழங்கப் பெற்றன
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை



No comments:

Post a Comment