Friday, 1 July 2016

36.tnpsc exam materials

601. # "இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் – பாரதியார்.
602. # "விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் – கார் நாற்பது.
603. # திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் – பொய்கையாழ்வார்
604. # தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் – தெ.பா.மீ
605. # மொழி என்பது – கருத்துக்களின் பரிமாற்றம்
606. # தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை – வடவேங்கடம் முதல் தென் குமரி வரை
607. # சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.
608. # சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.
609. # சங்கங்கள் தமிழ் வளர்த்தன.
610. # களவியலுரை என்பது ஒர் உரைநூல்.
611. # களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்
612. # களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்
613. # பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது – தமிழ்
614. # பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் – மதுரைக் காஞ்சி
615. # பொருநராற்றுப்படையைப் பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்.
616. # மலைபடுகடாம் என்னும் இலக்கியம் – கூத்தாற்றுப்படை
617. # முல்லைப்பாட்டைப் பாடியவர் – நப்பூதனார்.
618. # தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை
619. # உலா நூல்களுள் மிகப் பழமையைனது – திருக்கைலாய ஞான உலா
620. # தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா




No comments:

Post a Comment