Saturday, 16 July 2016

38.விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

விடைக்கெற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
61.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
அ)ஏழை சிரிப்பானா?
ஆ)இறைவனைக் எங்குக் காணலாம்?
இ)இறைவனைக் காண முடியுமா?
ஈ)இறைவனை யார் கண்பது?
விடை : ஆ)இறைவனைக் எங்குக் காணலாம்?

62.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
முயன்றால் முடியாதது இல்லை
அ)முயன்றால் முடியாதோ?
ஆ)முயன்றால் முடியாதது உண்டோ?
இ)முயன்றால் முடியாதது இல்லையோ?
ஈ)முயன்றால் முடியுமோ?
விடை : ஆ)முயன்றால் முடியாதது உண்டோ?

63.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
காற்றை மாசுபடுத்துபவை தொழிற் சாலைகளும் போக்குவரத்து சாதனங்களும் ஆகும்
அ)தொழிற்சாலைகள் காற்றை மாசு படுத்துகின்றனவா?
ஆ)காற்றை மாசுபடுத்துபவர் யார்?
இ)காற்றை மாசுபடுத்துபவை எவை?
ஈ)காற்றை மாசுபடுத்துபவை எது?
விடை : இ)காற்றை மாசுபடுத்துபவை எவை?

64.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
இளமையில் வறுமை கொடிது
அ)வறுமை எப்போது கொடியது?
ஆ)வறுமை யாருக்கு கொடிது?
இ)வறுமை எந்த வயதில் கொடிது?
ஈ)கொடிது எது?
விடை : ஈ)கொடிது எது?

65.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை
அ)தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
ஆ)சென்னை எதற்குத் தலைநகரம்?
இ)தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை தானா?
ஈ)தமிழ்நாட்டின் தலைநகரம் எங்கு உள்ளது?
விடை : அ)தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

66.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
நல்லோர்களால் இந்த உலகம் இயங்குகிறது
அ)யாரால் இந்த உலகம் இயங்குகிறது?
ஆ)எப்படி இந்த உலகம் இயங்குகிறது?
இ)ஏன் இந்த உலகம் இயங்குகிறது?
ஈ)எதற்காக இந்த உலகம் இயங்குகிறது?
விடை : அ)யாரால் இந்த உலகம் இயங்குகிறது?

67.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
விசயலட்சுமி வீணை வாசிக்கிறாள்
அ)விசயலட்சுமி ஏன் வீணை போசிக்கிறாள்
ஆ)விசயலட்சுமி ஏன் வீணை வாசிக்கிறாள் ?
இ)விசயலட்சுமி என்ன வாசிக்கிறாள்?
ஈ)விசயலட்சுமி வீணை வாசிப்பாளா
விடை : இ)விசயலட்சுமி என்ன வாசிக்கிறாள்?

68.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
நீர் உயர்ந்தால் நெல் உயரும்
அ)நீர் உயர்ந்தால் நெல் உயருமா?
ஆ)நீர் உயர்ந்தால் உது உயரும்?
இ)எது உயர நீர் வேண்டும்?
ஈ)நெல் உயர எது உயரும்?
விடை : ஆ)நீர் உயர்ந்தால் உது உயரும்?

69.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
மாலையில் முல்லை மலர்ந்தது
அ)மாலையில் மலர்ந்தது எது?
ஆ)முல்லை எப்போது மலரும்?
இ)மாலையில் என்ன மலர்ந்தது?
ஈ)மாலையில் முல்லை மலருமா?
விடை : இ)மாலையில் என்ன மலர்ந்தது?

70.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
தாயயைப் பெண் தெய்வம் என்று போற்றுதல் வேண்டும்
அ)பெண் தெய்வம் யார்?
ஆ)பெண்ணை எவ்வாறு போற்றுதல் வேண்டும்?
இ)தாயை எவ்வாறு போற்றுதல் வேண்டும்?
ஈ)தாயை போற்ற வேண்டுமா?
விடை : இ)தாயை எவ்வாறு போற்றுதல் வேண்டும்?



No comments:

Post a comment