Sunday, 17 July 2016

38.தமிழின் தொன்மையும் சிறப்பும் - திராவிட மொழி

தமிழின் தொன்மையும் சிறப்பும் - திராவிட மொழி
1.தொல்காப்பியர் கடி என்ற சொல்லுக்கு எத்தனை பொருட்களை கூறுகின்றார்
அ)7
ஆ)8
இ)9
ஈ)10
விடை : ஈ)10

2.எவற்றில் பழங்கால மக்கள் உடை,நிறம் தோற்றப்பபொலிவு ஆகியன திராவிட இனத்து மக்களுடன் ஒத்துப்போகின்றன
அ)எகிப்து
ஆ)சுமெரியம்
இ)பாரசீகம்
ஈ)அ மற்றும் ஆ
விடை : அ)எகிப்து

3.உலகின் மிகப் பெரிய தொகுப்பு நூலான சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள்
அ)25,820
ஆ)26,350
இ)26,400
ஈ)27,000
விடை : ஆ)26,350

4.உலகில் எத்தனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன
அ)4,000
ஆ)5,000
இ)6,000
ஈ)6,500
விடை : அ)4,000

5.திராவிட மொழிகளுள் தமிழுக்கு அடுத்து தொன்மையான மொழியாக விளங்குவது
அ)கன்னடம்
ஆ)தெலுங்கு
இ)மலையாளம்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஆ)தெலுங்கு

6.திராவிட மொழிகளிலே சொல்வளம் மிக்க மொழியாக இருப்பது எந்த மொழி
அ)தமிழ்
ஆ)மலையாளம்
இ)கன்னடம்
ஈ)துளு
விடை : அ)தமிழ்

7.தமிழ் தெலங்கு மலயாளம் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளும் ஒரு தனிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று முதன் முதலில் கூறியவர்
அ)கால்டுவெல்
ஆ)எல்லீஸ்
இ)துபாண்ட்
ஈ)சென்கின்ஸ்
விடை : ஆ)எல்லீஸ்

8.தற்போது எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளன
அ)22
ஆ)23
இ)25
ஈ)26
விடை : இ)25

9.திருத்திய திராவிட மொழிகளின் எண்ணிக்கை
அ)5
ஆ)6
இ)7
ஈ)8
விடை : ஆ)6

10.மொழி வழங்கும் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு திராவிட மொழிகள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளன
அ)3
ஆ)4
இ)5
ஈ)6
விடை : அ)3



No comments:

Post a comment