Saturday, 2 July 2016

3.tnpsc material

941. 1969 இந்தியாவின் குடியரசுதலைவராக வி.வி.கிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
942. பெரும் வணிக வங்கிகள் குடியரசு தலைவ மேலாணையால் தேசியமயமாக்கப்பட்டன.
943. 1970 மேகலயா தனி மாநிலமாக ஆக்கப்பட்டது
944. 1971 இமாச்சலபிரதேசம் மாநிலமாக ஆனது. இந்தோ-பாக் போர் ஆரம்பமானது, பங்காளதேஷ் பிறந்தது.
945. 1972 சிம்லா ஒப்பந்தம். சி. இராஜகோபாலச்சாரி இறந்தார்.
946. 1973 மைசூர் மாநிலம் கர்நாடகா மாநிலம் எனபெயர் மாற்றம் செய்யப்பட்டது.
947. 1974 இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. ஐந்தாவது குடியரசுதலைவராக பக்ருதீன் அலி அகமது தேர்ந்தெடுக்கப்பட்டார்.சிக்கிம் இந்தியாவின் மாநிலமாக இணைக்கப்பட்டது.
948. 1975 இந்தியா 'ஆரியப்பட்டா' என்ற செயற்கைகோளை ஏவியது. சிக்கிம் இந்தியாவின் 22 வது மாநிலமாக ஆனது. அவசரநிலை பிரகடனம் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டது.
949. 1976 இந்தியாவும் சீனாவும் ராஜ்ஜிய உறவை ஏற்படுத்திக்கொண்டன.
950. 1977 ஆறாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஜனதா கட்சி மக்களவையில் பெருன்பான்மை பெற்றது. இந்தியாவின் ஆறாவது குடியரசுதலைவராக நீலம் சஞ்சீவி ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
951. 1979 பிரதம மந்திரி பதவியை மொரஜி தேசாய் இராஜினாமா செய்தார். சரண்சிங் பிரதம மந்திரி ஆனார். ஆகஸ்டு 20 ஆம் நாள் சரண்சிங் பிரதம மந்திரி பதவியை இராஜினாமா செய்தார். ஆறாவது மக்களவை கலைக்கப்பட்டது.
952. 1980 ஏழாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது திருமதி. இந்திராகாந்தி பிரதம மந்திரியாக பதவி ஏற்றார். சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தார்; இந்தியா ரோகினி செயற்கைகோள் எஸ்.எல்.வி-3 விண்கலம் மூலம் விண்ணில் செலுத்தியது.
953. 1982 ஆசியாவில் மார்ச் 2 ஆம் நாள் மிக நீளமான பாலம் திறக்கப்பட்டது. ஆச்சார்ய ஜே.பி கிருபாலனி மார்ச் 19 ஆம் நாள் இறந்தார். இன்சாட் 1ஏ விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் குடியரசுதலைவராக கியானி ஜெயில் சிங் ஜுலை 15 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் 5 ஆம் நாள் குஜராத்தை தாக்கிய புயலால் 500 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நவம்பர் 15 ஆம் நாள் ஆச்சார்யா வினோபாவோ இறந்தார்.9 வது ஆசியா விளையாட்டுப் போட்டி நவம்பர் 19 ஆம் நாள் தொடங்கப்பட்டது
954. 1983 காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.
955. *பத்துக்கம்பன் என அழைக்கப்படுபவர் யார் மகாவித்துவான்? மீனாட்சி சுந்தரம்பிள்ளை
956. *.பாண்டி நன்னாடுடைத்து நல்லதமிழ் என்று பாடியவர் யார் ?ஒளவையார்
957. *.ஒன்றேகுலம்; ஒருவனே தேவன் என்று பாடியவர் யார்? திருமூலர்
958. *.பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்டபெயர் என்ன? திருத்தொண்டர்புராணம்
959. *.புறப்பாட்டு எனப்பெயர் பெறும் நூல் எது? புறநானூறு
960. *.குறிஞ்சித்தேன் என்ற நாவலின் ஆசிரியர் யார்? ராஜம் கிருஷ்ணன்
961. *.காய்ச்சீர் எந்தப் பாவிற்கு உரியது? வெண்பாவிற்கு உரியது
962. *மங்கையர்க்கரசியின் காதல் யார் எழுதிய சிறுகதை? வ.வே.சு.ஐயர்
963. * .பாலங்கள் யார் எழுதிய நாவல்? சிவசங்கரி
964. *.கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கிடில் கைகொட்டிச்சிரியாரோ என்று பாடியவர் யார்? பாரதியார்





No comments:

Post a Comment