Saturday, 30 July 2016

3.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.திருத்தொண்டர் புராணத்துக்கு வேறு பெயர்
அ)திருவிளையாடற்புராணம்
ஆ)கந்தபுராணம்
இ)பெரிய புரணாம்
ஈ)சீறாப்புராணம்
விடை : இ)பெரிய புரணாம்
82.பொருத்துக
1.சத்திய வேதம்    அ.பெரிய புராணம்
2.உத்திர வேதம்    ஆ.திருக்குறள்
3.ஒற்றுமைக் காப்பியம் இ.விவிலியம்
4.பன்னிரைண்டாம்     ஈ.சிலப்பதிகாரம்
அ) (1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ) (1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
இ) (1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஈ) (1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
விடை : அ) (1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
83.வளர்ச்சியுற்ற - பிரித்து எழுதுக
அ)வளர்ச்சி + யற்ற
ஆ)வளர்ச்சி +  உற்ற
இ)வளர்ச்சியை +  உற்ற
ஈ)வளர்ச்சி +  இறை
விடை : ஆ)வளர்ச்சி +  உற்ற
84.பிரித்து எழுதுவதில் சரியானதைத் தேர்க - பிழைத்துணர்ந்தும்
அ)பிழைத்து +  உணர்ந்தும்
ஆ)பிடை +  ந் +  உணர்ந்தும்
இ)பிழை +  துணர்ந்தும்
ஈ)பிழை +  உணர்ந்தும்
விடை : அ)பிழைத்து +  உணர்ந்தும்
85.சேர்த்து எழுதுக - தெங்கு + அம் + பழம்
அ)தெங்கு அம்பழம்
ஆ)தெங்கம்பழம்
இ)தெங்அம்பழம்
ஈ)தெங்கஅம்பழம்
விடை : ஆ)தெங்கம்பழம்
86.பிரித்து எழுதுக - சுரமரிய
அ)சுரம் +  அரிய
ஆ)சுரம் +  மரிய
இ)சுரம + ; அரி +  ய
ஈ)சுர +  அம் +  அரிய
விடை : அ)சுரம் +  அரிய
87. பூந்தளிர் எப்படிப் பிரியும்?
அ)பூந் + தளிர்
ஆ)பூ  + தளிர்
இ)பூந்த + ளிர்
ஈ)பூம் + தளிர்
விடை : ஆ)பூ  + தளிர்
88.ஊற்றுக் கோல் - சரியான விடையைத் தேர்ந்தெடு
அ)ஊற்று + கோல்
ஆ)ஊன்று + கோல்
இ)ஊன்று + கோல்
ஈ)ஊன்றுக் + கோல்
விடை : ஆ)ஊன்று + கோல்
89.பின்வரும் சொல்லுக்கு எதிர்ச்சொல் தருக தண்ணீர்
அ)வெந்நீர்
ஆ)களிர்ந்த நீர்
இ)பருகு நீர்
ஈ)வேறு நீர்
விடை : அ)வெந்நீர்
90.எதிர்ச்சொல் தேர்க - மேதை
அ)அறிவாளி
ஆ)வாதை
இ)பாதை
ஈ)பேதை
விடை : ஈ)பேதை



No comments:

Post a Comment