Tuesday, 26 July 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.செய்வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு
அ)நான் ஆசிரியரால் பாராட்டப்பட்டேன்
ஆ)ஆசிரியர் என்னை பாராட்டினார்
இ)திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது
ஈ)அவனால் பணம் பெறப்பட்டது
விடை : ஆ)ஆசிரியர் என்னை பாராட்டினார்
42.செயப்பாட்டு வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு
அ)முகந்தன் அவன் நண்பனால் காபாற்றப்பட்டான்
ஆ)ஆசிரியர் பாடத்தை நன்கு கற்பிக்கிறார்
இ)கந்தன் படம் பார்த்தாhர்
ஈ)முருகன் படம் வரைந்து கொண்டிருந்தான்
விடை : அ)முகந்தன் அவன் நண்பனால் காபாற்றப்பட்டான்
43.திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் - இது எவ்வகை வாக்கியம் ?
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : அ)செய்வினை
44.அறம் செய் - எவ்வகை வாக்கியம்?
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஈ)கட்டளை வாக்கியம்
45.அத்தி பூத்தாற் போல - என்ற உவமை உணர்த்தும் பொருள்
அ)எப்பொழுதாவது
ஆ)எப்பொழுதும்
இ)எதிர்பாராது
ஈ)உதிர்பார்த்தபடி
விடை : அ)எப்பொழுதாவது
46.அரியினொடு அரிஇனம் அடர்ப்பபோல் என்னும் உவமையால் விளக்கப்படும் பொருள்
அ)சிங்கங்கள் சிங்கங்களோடு போர் புரிதல்
ஆ)புலியோடு புலி போர் புரிதல்
இ)மன்னர்களோடு மன்னர்கள போர் புரிதல்
ஈ)வீரர்களோடு வீரர்கள் போர் புரிதல்
விடை : அ)சிங்கங்கள் சிங்கங்களோடு போர் புரிதல்
47.காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் - இத்தொடர் உணர்த்தும் பொருள்
அ)எதை செய்தாலும் காலத்தோடு செய்
ஆ)வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்
இ)காலத்தை வீணாக்காதே
ஈ)வாய்ப்பு வரும்போது பயன்படுத்திக் கொள்
விடை : ஈ)வாய்ப்பு வரும்போது பயன்படுத்திக் கொள்
48.அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும் - மோனைத் தொடையைத் தேர்ந்தெடு
அ)அறவோர்க்கு ஒம்பலும்
ஆ)அறவோர்க்கு அளித்தலும் அந்தணர்
இ)அந்தணர் ஒம்பலும்
ஈ)ஒம்பலும் அந்தணர்
விடை : ஆ)அறவோர்க்கு அளித்தலும் அந்தணர்
49.எங்கும் உள்ளது உன் வடிவம்
எனினும் குருடர் காண்பாரோ?
எங்கும் எழுவது என் குரலாம்
எனினும் செவிடர் கேட்பாரோ?
இப்பாடலில் அமைந்துள்ள இயைபுத் தொடைச் சொல் யாது?
அ)எங்கும்,எனினும்
ஆ)காண்பாரோடு,கேட்பாரோ
இ)எங்கும் எங்கும்
ஈ)குருடர்,செவிடர்
விடை : ஆ)காண்பாரோடு,கேட்பாரோ
50.கற்க இதற்கு இணையாக  மோனை சொல்
அ)நிற்க
ஆ)கற்ற பின்
இ)அதற்கு
ஈ)விற்க
விடை : ஆ)கற்ற பின்



No comments:

Post a Comment